»   »  "நாட்டாமை.. போஸ்டரை மாத்தி பண்ணுங்க" - 'பாம்பன்' போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

"நாட்டாமை.. போஸ்டரை மாத்தி பண்ணுங்க" - 'பாம்பன்' போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Posted By: Vignesh
Subscribe to Oneindia Tamil
'பாம்பன்' போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை : சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான ஆர்.சரத்குமார் நடிக்கும் புதிய படம் 'பாம்பன்'.

'சென்னையில் ஒரு நாள் 2' படத்திற்கு பிறக்கு இந்தப் படத்தில் நடிக்கிறார் சரத்குமார். ஷூட்டிங் தொடங்கவிருக்கும் 'பாம்பன்' படத்தின் போஸ்டர்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன.

சரத்குமார் நடிக்கும் 'பாம்பன்' படத்தின் போஸ்டர்கள் ஹாலிவுட்டின் 'Aqua man' பட போஸ்டர்களின் காப்பி என நெட்டிசன்கள் பகிரத் தொடங்கிவிட்டனர்.

பாம்பன்

பாம்பன்

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் திரைப்படம் 'பாம்பன்'. இப்படத்திற்கு ஶ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் ரெக்கார்டிங் இன்று தொடங்குவதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

பாம்பன் போஸ்டர்

'பாம்பன்' படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இருக்கின்றன. இப்படத்தின் போஸ்டர்கள் ஹாலிவுட்டின் 'அக்வா மேன்' படத்தின் காப்பி போல இருப்பதாக நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

அக்வா மேன்

அக்வா மேன்

'அக்வா மேன்' ஹாலிவுட் திரைப்படம் டி.சி.காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம். இதில் அக்வா மேனாக ஜேசன் மோமா நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

நெட்டிசன்ஸ் கலாய்

'சீதக்காதி பட டைட்டிலை கேள்விப்பட்டதும் "படத்தை ஒழுங்கா எடுக்கனும் ஆமா"ன்னு கீழக்கரைல சிலர் பேட்டி கொடுத்தமாதிரி.. சரத்குமார் நடிக்கும் 'பாம்பன்' படத்துக்கு பாம்பன் மக்கள் எதாவது பேட்டி வச்சிருக்கீங்களா ?

English summary
'Paamban' is the new film starring R. Sarath Kumar. 'Paamban' will start shooting and the posters of the film have been released. The posters of the film 'Paamban' are looks like 'Aqua man' film posters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil