»   »  'சண்டக்கோழி -2' படத்தில் 'சரத்குமார்'!

'சண்டக்கோழி -2' படத்தில் 'சரத்குமார்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ஆகியோர் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் சண்டக்கோழி. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்போது விஷால் நடிப்பில் 'சண்டக்கோழி 2' தயாராகவிருக்கிறது.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத்குமார். இருங்க... இருங்க.. இவர் நாட்டாம சரத்குமார் இல்லீங்க... மலையாள பார்ட்டி!

Sarathkumar in Sandakozhi 2

கடந்த வாரம் வெளியான 'போக்கிரி சைமன்' என்கிற படத்தில் தீவிரமான விஜய் ரசிகராக நடித்துள்ளார் இந்த சரத்குமார். இப்போது லிங்குசாமியின் டைரக்ஷனில் விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி-2' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத்குமார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற படம் 'அங்கமாலி டைரீஸ்'. இந்தப்படத்தில் நாயகனுக்கு இணையாக ஆனால் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சரத்குமார் என்கிற புதுமுகம்.

ஹீரோவை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அதையெல்லாம் விட மோகன்லால் - லால் ஜோஸ் கூட்டணியில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல்' பாடல் அதிரிபுதிரி ஹிட்டாக அதில் நடித்த இவருக்கு இப்போது வாய்ப்புகள் குவிகின்றன.

விஜய் ரசிகராக நடித்து, தற்போது விஷால் படத்திலும் முக்கிய இடம்பிடித்துள்ள சரத்குமார், 'விக்ரம் நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து சிறிய வேடத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதுதான் எனது ஆசை,' எனக் கூறியுள்ளார்.

English summary
'Sandakozhi 2' is now ready for Vishal's performance following the success of 'Sandakozhi'. Malayalam actor Sarath Kumar is playing a prominent role in 'Sandakozhi 2'. Sarath Kumar played a parallel to the hero role in 'Angamaly Diaries'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil