நடிகர் சூர்யாவுக்கு சரத்குமார் எழுதிய திடீர் கடிதம்! என்ன விஷயம்?

சென்னை: சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்துக்கு ஒரு பக்கம் பாராட்டுக்களும் மறுபக்கம் எதிர்ப்புகளும் வந்த வண்ணமே உள்ளன.

அன்புமணி ராமதாஸின் கடிதத்திற்கு சூர்யா பதில் அளித்த நிலையில், அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படம் சமூக அநீதிகளை எந்தவொரு தயக்கமும் இல்லாமல் சொல்லி உள்ளது என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் பாராட்டி உள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பேச வைத்த படம்

பேச வைத்த படம்

ஆதரவு, எதிர்ப்பு என இரு தரப்பு வாதங்களையும் விவாதங்களையும் கிளப்ப வைத்து அனைவரையும் இந்த ஜெய் பீம் படம் பேச வைத்துள்ளது. பத்திரிகையாளரும் இயக்குநருமான தா.செ. ஞானவேல் தொட்ட ஜெய்பீம் முழக்கம் சிலருக்கு எரிச்சலையும், சிலருக்கு நம்பிக்கையும் கொடுத்துள்ளதே இந்த அளவுக்கு ஒரு திரைப்படம் மக்கள் மத்தியில் மட்டுமின்றி அரசியல் களத்திலும் பேசு பொருளாக அமைந்துள்ளது.

சரத்குமார் பாராட்டு

சரத்குமார் பாராட்டு

ஜெய்பீம் போன்ற திரைக்கதையை சினிமாவாக மாற்றி நடித்து இந்த அளவுக்கு அதன் தாக்கத்தை கொண்டு செல்ல முழு முயற்சி எடுத்த நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தரும் வகையில் நடிகர் சரத்குமார் தற்போது நீண்ட பாராட்டு கடிதம் ஒன்றை எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நீதியரசர் சந்துரு

நீதியரசர் சந்துரு

"அன்புள்ள சூர்யாவிற்கு, வணக்கம். ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்தேன். நடந்த சம்பவங்களை, சரித்திர நிகழ்வுகளை மறந்தநிலையில், நீதி அரசர் சந்துரு அவர்களின் சமூக அக்கறையை, உலகம் மறந்துவிடக் கூடாது என்ற சிறந்த நோக்கத்தோடும், சமூக அநீதிகளை பிரபலங்கள் எந்த ஒரு தயக்கம் இல்லாமல், வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற 'ஜெய்பீம்' சூர்யாவின் உன்னத எண்ணத்தை முதலில் பாராட்டுகிறேன்." என ஆரம்பித்து தனது மனமார்ந்த பாராட்டுக்களை சூர்யாவுக்கு கூறியுள்ளார் சரத்குமார்.

நீதி அனைவருக்கும் பொது

நீதி அனைவருக்கும் பொது

நீதியை நிலைநாட்ட போராடிய ராசாகண்ணுவின் மனைவியும், நீதி தோற்றுவிடக்கூடாது என்று போராடிய சந்துருவை போலவும், பெருமாள்சாமியை போலவும், நாட்டில் பலர் தோன்ற வேண்டும். நீதி அனைவருக்கும் பொது. இதில், ஏற்றத்தாழ்வு, ஏழை, பணக்காரன், ஜாதி, மத, மொழி, பேதங்கள் கூடாது என்ற நிலை எப்போது வருகிறதோ அன்று தான் நாடு உண்மையான சுதந்திர நாடு எனக் கூறியுள்ளார்.

Recommended Video

பெயர் அரசியலாக மாற்ற வேண்டாம் | Anbumani-கு பதிலடி கொடுத்த Suriya | JaiBhim
சரத்குமார் நெகிழ்ச்சி

சரத்குமார் நெகிழ்ச்சி

சிறந்த படைப்பை தந்த சூர்யாவை போற்றுகிறேன், ஞானவேலை பாராட்டுகிறேன். ராசாகண்ணு, செங்கேணி, தமிழ், சூப்பர்குட் சுப்பிரமணி, மற்றும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கும் சக கலைஞர்களையும் என் உள்ளத்தின் அடிதளத்தில் இருந்து போற்றுகிறேன். I am touched Deeply. என சரத்குமார் நெகிழ்ச்சியுடன் எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X