»   »  இனிமே இப்படி செய்யாதீங்க வருங்கால சூப்பர் ஸ்டார்: சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு வேண்டுகோள்

இனிமே இப்படி செய்யாதீங்க வருங்கால சூப்பர் ஸ்டார்: சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரூ. 2.5 கோடி பணத்தை நடிகர் சங்கத்திற்கு கொடுத்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்- வீடியோ

சென்னை: ரூ. 2.5 கோடி பணத்தை நடிகர் சங்கத்திற்கு ஏன் கொடுத்தீர்கள் என்று மக்கள் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடத்தினார்கள். அதில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன், சத்யராஜ் உள்ளிட்ட 350 நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்திருந்தார். மேலும் சங்க கட்டிடம் கட்ட ரூ. 2.5 கோடி நிதி அளித்தார்.

ரூ. 2.5 கோடி

ரூ. 2.5 கோடி

ரூ. 2.5 கோடி பணத்தை போயும் போயும் நடிகர் சங்கத்திற்கு எதற்காக கொடுத்தீர்கள் சரவணா அருள். அந்த பணத்தை வைத்து மக்களுக்கு ஏதாவது நீங்களே செய்திருக்கலாமே என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

பணம்

காசு நிறைய்யா இருந்தா அநாதை, முதியோர் இல்லத்துக்கு கொடுங்க சரவணா ஸ்டோர் அங்கிள்

கோடி கோடியா சம்பாதிச்சும் வரி ஏய்ப்பு செய்ற நடிகர்கள் கட்டும் நடிகர் சங்கத்துக்கு 2கோடியே ஐம்பது லட்சம் தானம் பண்ணது வேஸ்ட்.

சரவணா

சரவணா

நடிகர்களுக்கு ஏன் இவ்வளவு தொகை சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி கொடுக்கிறார். நடிகருக்கு ஆளுக்கு ஒரு கோடி கொடுத்திருந்தால் எப்பவோ அந்த கட்டிடத்தை கட்டி இருக்கலாமே. எனக்கு தெரிஞ்சி எத்தனையோ வருஷமா கட்டடம் கற்றதை சொல்றாங்க. என்ன அரண்மனையை கட்டவா போறீங்க என்று ஒன்இந்தியா வாசகர் கமெண்ட் போட்டுள்ளார்.

அரசியல்

அரசியல்

சினிமாவில் இல்லாத சரவணாஸ் அருளால் 2 1/2 கோடி வழங்க பட்டு உள்ளது சினிமாவில் உள்ள ரசனி எத்தனை கொடுத்தார் இவரை நம்பி அரசியல் வேறு என்று ஒன்இந்தியா வாசகர் தெரிவித்துள்ளார்.

சினிமா

சினிமா

ரஜினி அரசியலுக்கு செல்வதால் சூப்பர் ஸ்டார் இடம் காலியாகிறது. அந்த இடத்தை நிரப்ப சரியான ஆள் நீங்கள் தான். துணிந்து சினிமாவுக்கு வாங்க என்று நெட்டிசன்ஸ் சரவணா அருளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
People have requested Saravana Stores owner Saravana Arul to stop donating money to Nadigar Sangam as the celebrities are rich enough to pay for their sangam building. Saravana Arul has donated Rs. 2.5 crore to Nadigar Sangam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X