அரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா?: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar
Recommended Video

சென்னை: அரசின் கொள்கை முடிவை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா என்று சர்கார் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மாநில அரசை விளாசியுள்ளது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் வந்த சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு அந்த காட்சிகளை நீக்க வைத்தது. சர்கார் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அரசை விமர்சித்து படம் எடுக்கக் கூடாது என்றும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று முருகதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார். மன்னிப்பு கேட்க மறுத்த முருகதாஸ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசை விளாசியுள்ளது.
அரசின் கொள்கை முடிவை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா?, படத்தில் வன்முறை காட்சிகள் இருந்தது என்றால் சென்சார் போர்டு அதிகாரிகளிடம் ஏன் விசாரிக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்சார் போர்டு படத்தை பார்த்து சான்றிதழ் அளித்த பிறகும் அரசு அதில் தலையிடுவது சரி அல்ல என்று பலரும் விமர்சித்த நிலையில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











