twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவிய விஜய்யின் சர்கார் கதை

    By Siva
    |

    சென்னை: பாக்யராஜ் கூறிய சர்கார் கதை இது தான் என்று கூறி வாட்ஸ்ஆப்பில் ஒரு கதை வலம் வந்து கொண்டிருக்கிறது.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் வரும் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. கதை திருட்டு பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் பாக்யராஜ் கூறிய சர்கார் படத்தின் கதை இது தான் என்று கூறி வாட்ஸ்ஆப்பில் ஒரு கதை வலம் வருகிறது. அந்த கதை விவரம் இதோ,

    Exclusive : திறமை இருந்தால் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது: 'தொரட்டி' நாயகி சத்யகலா Exclusive : திறமை இருந்தால் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது: 'தொரட்டி' நாயகி சத்யகலா

    தேர்தல்

    தேர்தல்

    விஜய் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர். தமிழர். ஒரு பெரிய மல்டிநேஷனல் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பவர். அப்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வருகிறார் விஜய்.
    ஆர்வத்துடன் ஓட்டுப் போட வந்த விஜய்க்கு பெரும் ஏமாற்றம். கையில் அடையாள அட்டை வைத்திருந்தும் அவருடைய ஓட்டை அவருக்கு முன்பாகவே யாரோ ஒரு இந்தியனோ, தமிழனோ போட்டுவிட்டு போய்விட்டான். இதனால் கோபப்படுகிறார் விஜய்.

    அரசியல்வாதிகள்

    அரசியல்வாதிகள்

    அதிகாரிகளிடம் சண்டையிடுகிறார். ஆனாலும் ஓட்டளிக்க முடியவில்லை.

    இதனால் கோபமடையும் இவர் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். போராடுகிறார். அந்தத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இடையில் அத்தேர்தல் ரத்தானதால் அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார் விஜய்.

    போட்டி

    போட்டி

    "தேர்தலில் நிற்பதும், பிரச்சாரம் செய்வதும், செலவு செய்வதும் எத்தனை பெரிய கஷ்டம் தெரியுமா. இப்போ போட்ட காசெல்லாம் போச்சு.. யார் தருவா.. உனக்கு அரசியலை பத்தி என்ன தெரியும்..? என்று அவர்களெல்லாம் விஜய்யின் தன்மானத்தைச் சீண்டிவிட.. இப்போது விஜய் அதே தொகுதியில் துணிச்சலாக சுயேட்சையாக நிற்க முடிவெடுக்கிறார். இதுதான் இடைவேளை போர்ஷன் என்கிறார்கள்.

    இதற்குப் பின் அதே தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்.

    எதிர்ப்புகள்

    எதிர்ப்புகள்


    விஜய்யைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்கும் சூழ்ச்சிகள். எதிர்ப்புகள்.. அடிதடி. கலாட்டா.. இது எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு களத்தில் நின்று வெற்றியும் பெற்று விடுகிறார் விஜய்.

    அதிசயத்திலும் அதிசயமாக தமிழக சட்டமன்றத்தில் அப்போது தொங்கு சட்டசபை உருவாகிவிடுகிறது. ஒரேயொரு உறுப்பினர் ஆதரவு இருந்தால் தான் ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலைமை. இப்போது அந்த ஒரேயொரு சுயேட்சை உறுப்பினர் சாட்சாத் நம்ம விஜய் தான்.

    முதல்வர்

    முதல்வர்

    விஜய்யிடம் இரு தரப்பினரும் ஆதரவு கேட்கிறார்கள். எப்படியாவது நம்ம கட்சி ஆட்சியில் இருந்தால் போதும் என்று நினைக்கும் இரு கட்சியினருமே விஜய்யையே முதல்வராக்கவும் சம்மதம் கொடுக்கிறார்கள். "விஜய் முதல்வரானால் போதும். நாங்கள் அவருக்குக் கீழ் அமைச்சர்களாக இருந்து கொள்கிறோம்." என்று இரு கட்சிகளின் தலைவர்களும் சொல்லிவிடுகிறார்கள்.

    மக்கள்

    மக்கள்


    விஜய் கடைசி ட்விஸ்ட்டாக "நான் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு நினைச்சுத்தான் இந்தத் தேர்தலில் நின்றேன். முதலமைச்சராகணும் என்று நினைக்கவில்லை. இப்போது முதல்வராக ஆனேன் என்றால் என்னால் உங்களை வைத்துக் கொண்டு நல்லது செய்ய முடியாது. அதனால் நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன். அப்போது தான் இந்த ஆட்சியின் குற்றம், குறைகளைச் சொல்லி திருத்த முடியும். ஆகவே, நல்லதொரு எதிர்க்கட்சி உறுப்பினராக எனது தொகுதி மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.
    இது தான் அந்த கதை என்று வாட்ஸ்ஆப்பில் வலம் வருகிறது.

    English summary
    A story is doing rounds on WhatsApp saying that this is the story of Vijay starrer Sarkar revealed by Bhagyaraj.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X