»   »  விஜய், அஜீத்தை இயக்க ஆசைப்படும் சசிகுமார்... தெறிக்க விடுவாரா?

விஜய், அஜீத்தை இயக்க ஆசைப்படும் சசிகுமார்... தெறிக்க விடுவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் மற்றும் அஜீத்தை வைத்து படங்கள் இயக்கும் ஆசை இருப்பதாகத் தெரிவித்துள்ளார் பிரபல நடிகரும், இயக்குநருமான சசிகுமார்.

சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழில் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் சசிகுமார். தொடர்ந்து நாடோடிகள், சுந்தரபாண்டியன் என இவரது படங்கள் வெற்றியைக் குவிக்க தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவரானார்.

இவர் தற்போது பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை என்ற படத்தில் நடித்துள்ளார். இளையராஜாவின் 1000வது படம் என்ற பெருமைக்குரிய இப்படம் வரும் பொங்கல் அன்று ரிலீசாக உள்ளது.

விஜய்...

விஜய்...

இந்நிலையில் நடிகர் விஜயை இயக்கும் ஆசை இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சசிகுமார். ஏற்கனவே, இது தொடர்பாக இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால், இதுவரை ஒப்பந்தம் எதுவும் அதிகாரப்பூர்வமாகப் போடப்பட்டதாக தகவல் இல்லை.

அஜித்...

அஜித்...

அதோடு அஜித்திற்கென கதை ஒன்றையும் தயார் செய்து வைத்துள்ளாராம் சசிகுமார். ஆனால், அந்தக் கதை குறித்து அஜித்திடம் அவர் பேசினாரா இல்லையா, இல்லை விரைவில் பேசுவாரா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

குடும்பப்பாங்கான படங்கள்...

குடும்பப்பாங்கான படங்கள்...

கிராமப்புற மற்றும் குடும்பப் பாங்கான கதைகளுக்கு பேர் போனவர் சசிகுமார். அதே போல், அவரது படங்களில் அதிரடி ஆக்‌ஷன்களுக்கும் பஞ்சமிருக்காது.

தெறிக்க விடுவாரா...

தெறிக்க விடுவாரா...

அப்படிப்பட்டவர் விஜய் மற்றும் அஜீத்திற்கு கதை தயார் செய்து வைத்திருக்கிறார் என்றால், நிச்சயம் அது ‘தெறி'க்க விடும் விதமாகத் தான் இருக்கும்.

English summary
Sasikumar, who is all set for the release of "Tharai Thappattai", has revealed his plans to direct none other than Ilayathalapathy Vijay. The actor-director also opened up on his wish to work with Ajith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil