»   »  பலே வெள்ளையத் தேவா... இது சசிகுமாரின் அடுத்த படம்!

பலே வெள்ளையத் தேவா... இது சசிகுமாரின் அடுத்த படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதிய இயக்குநர்களை நம்பி தைரியமாக தன் படங்களைக் கொடுத்து வரும் சசிகுமார், அடுத்தும் தேர்வு செய்திருப்பது ஒரு அறிமுக இயக்குநரைத்தான்.

அவர் பிரகாஷ். சசிகுமார் நாயகனாக நடிக்க, அவரது கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை பிரகாஷ்தான் இயக்குகிறார். படத்துக்கு பலே வெள்ளையத் தேவா என தலைப்பிட்டுள்ளனர்.

Sasikumar's next Bale Vellaya Theva

இந்தப் படத்தை சத்தமின்றி கடந்த செப்டம்பர் மாதமே தொடங்கிவிட்ட சசிகுமார், இப்போதுதான் தலைப்பை அறிவித்துள்ளார். நாயகி மற்றும் முக்கிய டெக்னீஷியன்கள் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை.

இதுகுறித்து சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "பலே வெள்ளையத்தேவா' எங்களது கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் 9-வதாக தயாரிக்கும் படத்தின் தலைப்பு," என்று மட்டும் தெரிவித்திருக்கிறார்.

கிடாரி படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றியடையாததால், இந்தப் படத்தை எந்த பரபரப்பும் இல்லாமல் தயாரித்து வருகிறார் சசிகுமார். ஆனால் தலைப்பைப் பார்த்தால் ஒரு சின்ன கலகம் இல்லாமல் வெளியாகாது போலிருக்கிறது.

English summary
Sasikumar's next after Kidaari movie has titled as Bale Vellaya Theve.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil