ஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணையும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்!
சென்னை: க/பெ ரணசிங்கம் படத்தின் இயக்குனர் விருமாண்டி இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார்.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம், க/பெ.ரணசிங்கம். இதை அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கி இருந்தார்.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் இந்தப் படத்தை கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்தார்.

வரவேற்பை பெற்றது
இதில் ரங்கராஜ் பாண்டே, அருண்ராஜா காமராஜ், பவானி ஶ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் ஒடிடியில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் விருமாண்டியையும் படத்தில் பணியாற்றியவர்களையும் அனைவரும் பாராட்டினர்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. எனது திரையுலக வாழ்க்கையில் 'க/பெ ரணசிங்கம்' முக்கியமான படம் என்று கூறியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில், இயக்குனர் விருமாண்டி அடுத்த படத்துக்கு ரெடியாகிவிட்டார். உண்மை சம்பவக் கதை ஒன்றை அவர் இயக்க இருக்கிறார்.

அலுவலக பூஜை
இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். ஏப்ரல் மாதத்தில் இருந்து இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.விஸ்வநாதன் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதற்கான அலுவலக பூஜை இன்று நடைபெற்றது.

நடிகர், நடிகைகள்
படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஏப்ரல் மாதம் ஷூட்டிங்கை தொடங்கி, இந்த ஆண்டுக்குள் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அடுத்த நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











