twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெறும் ட்வீட் மட்டும் போடல.. சனம் ஷெட்டி ஒரு ஸ்டெப் மேல போய்.. #JusticeForJeyarajAndBennicks

    |

    சென்னை: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

    கமல்ஹாசன் முதல் சூர்யா வரை பல முன்னணி பிரபலங்கள் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகனுக்கு நடந்த கொடூர மரணத்தை கண்டித்து வருகின்றனர்.

    கோலிவுட் நடிகைகளை தாண்டி பாலிவுட் நடிகைகளான கங்கனா ரனாவத், பிரியங்கா சோப்ரா, டாப்ஸி, கியாரா அத்வானி உள்ளிட்ட பலரும் தங்கள் எதிர்ப்பை இந்த விவகாரத்தில் பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து டிரெண்டிங்

    தொடர்ந்து டிரெண்டிங்

    சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மரணம் அடைந்தனர். போலீஸ் அதிகாரிகள் அடித்தே இருவரையும் கொன்றதாகவும், சித்ரவதை செய்து கொன்றதாகவும் பல பிரபலங்கள் கொந்தளித்து தொடர்ந்து #JusticeForJeyarajAndBennicks என்ற ஹாஷ்டேக்கை பொதுமக்களுடன் இணைந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    பரிணீத்தி சோப்ரா

    பரிணீத்தி சோப்ரா

    நடிகை பிரியங்கா சோப்ராவின் கண்டனம் சர்வதேச அளவில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொண்டு சென்ற நிலையில், பல பாலிவுட் பிரபலங்களும் தங்கள் கண்டனங்களை இந்த விவகாரத்தில் தெரிவித்து வருகின்றனர். பிரியங்கா சோப்ராவின் தங்கையும் நடிகையுமான பரிணீத்தி சோப்ரா, காவலர்களே ஆபத்தானவர்களாக இருந்தால், மக்கள் எங்கே செல்வார்கள் என விளாசி உள்ளார்.

    Recommended Video

    Sathankulam Incident : Rajinikanth ஏன் பேசாமல் இருக்கிறார்?
    சனம் ஷெட்டி புகார்

    சனம் ஷெட்டி புகார்

    பிக்பாஸ் பிரபலம் தர்ஷனின் முன்னாள் காதலியும், கோலிவுட் நடிகையுமான சனம் ஷெட்டி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு வெறும் நீதி மட்டும் கேட்டு ட்வீட் போடாமல், ஒரு படி மேலே சென்று புகாரையும் பதிவு செய்துள்ளார். மனித உரிமை ஆணையத்திற்கு அவர் அளித்த புகாரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    நீதி கிடைக்கும் வரை போராடுவோம்

    நீதி கிடைக்கும் வரை போராடுவோம்

    மேலும், தன்னை போலவே தனது ரசிகர்களும் இந்த கொடூர மரணம் தொடர்பாக புகார்களை தைரியமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். நிறைய புகார்கள் நிறைய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டால் தான் குற்றவாளிகள் தப்பிக்க முடியாத நிலை உருவாகி உயிரிழந்தவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும் என்றும் சனம் ஷெட்டி பதிவிட்டுள்ளார்.

    வீடியோ பேச்சு

    முன்னதாக கருப்பு நாள் என கேப்ஷன் கொடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஏன் இப்படி கொடூரமாக கொலை செய்தார்கள் என்றும், இந்த அளவுக்கு சித்ரவதை செய்து கொலை செய்யும் அளவுக்கு அவர்கள் அப்படி என்ன குற்றம் செய்து விட்டார்கள். லாக்டவுன் சமயத்தில், அனுமதித்த நேரத்தை விட கூடுதலாக கடை திறந்த குற்றத்திற்கு இத்தனை பெரிய தண்டனையா? குற்றவாளிகளை காப்பாற்றாமல் அவர்களுக்கு உரிய தண்டனையை அளியுங்கள் என தமிழ் நாடு முதல்வருக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

    English summary
    actress Sanam Shetty has lodged a complaint with the Human Rights Commission of India. Sharing the details of the same on her social networking page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X