»   »  சவரக்கத்தி... வசூல் எப்படி?

சவரக்கத்தி... வசூல் எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Savarakathi movie box office..சவரகத்தி வசூல் எவ்வளவு தெரியுமா?- வீடியோ

தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கிய மிஷ்கின், ராம் இருவரும் நடித்துள்ள படம் சவரக்கத்தி. இந்த வாரம் வெளியான கலகலப்பு - 2, சொல்லிவிட வா, படங்களுடன் சவரக்கத்தி போட்டி போட்டது.

இப்படத்தின் விளம்பரம் வித்தியாசமாக இருந்ததுடன் தமிழ் நாட்டில் முன்ணனி விநியோகஸ்தர்களால் படம்வெளியிடப்பட்டது.

Savarakathi Box Office

சவரக்கத்தி சமரசமின்றி நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ள படம் என்று விமர்சகர்களால், விநியோகஸ்தர்கள் தரப்பில் பாராட்டப்பட்டது. ஆனாலும் சாமானிய மக்களை இந்தப் படம் சென்று சேர்ந்ததா என்பது சந்தேகம்தான்.

சுமார் 1.80 கோடிக்கு விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டுள்ள 'சவரக்கத்தி' முதல் நாள் தமிழ்நாட்டில் சுமார் 50 லட்ச ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது.

அடுத்து வரும் நாட்களில் நகர்புறங்களில் சவரக்கத்தி வசூல் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

சவரக் கத்தி படத்தின் கதை தான் என்ன?

ராமின் பிரதான தொழில் சவரம் செய்தல். காதுகேளாத பூர்ணா இவரின் மனைவி. இரண்டு குழந்தைகள். பார்ப்பதற்கு வெகுளியாக இருந்தாலும், செம உஷார்.

தனது குடும்பத்துடன் அவர் தன் மச்சினன் திருமணத்திற்குச் செல்கிறார். போகிற வழியில் ஒருவிபத்து ஏற்படுகிறது. அப்போது அங்கு தாதா மிஷ்கின் அடியாட்களுடன் வருகிறார்.

அப்போது அங்கு ராம் தேவையில்லாமல் பேச அங்கு ஆரம்பிக்கிறது மிஷ்கின், ராம் இருவருக்கும் இடையே பகை. இதனை மையப்படுத்தி படம் நகர்கிறது.

முக்கியமான காட்சிகளில் மட்டும் ஒலிக்கும் 'மது ஐயர்' பாடிய கருத்து நிறைந்த பாடல் ரசிக்கத்தக்கது. இரத்த சொந்தத்தில் நாம் அனைவரும் ஒன்று பட்டவர்கள் என்பதனை கிளைமேக்ஸ் காட்சி உணர்த்துகிறது.

English summary
Bo report of Mysskin, Ram starrer Savarakathi movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil