»   »  நயன்தாராவுக்கு 'லிப் டூ லிப்' கொடுத்த பள்ளி மாணவன்: தீயாக பரவும் வீடியோ

நயன்தாராவுக்கு 'லிப் டூ லிப்' கொடுத்த பள்ளி மாணவன்: தீயாக பரவும் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருநாள் படத்தில் 6 வயது பள்ளி மாணவன் ஒருவன் நயன்தாராவின் உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோ இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது.

ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடித்த திருநாள் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. ஜீவாவும், நயன்தாராவும் சிறப்பாக நடித்திருந்தபோதிலும் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.

இந்நிலையில் படத்தில் வரும் ஒரு காட்சியின் வீடியோ இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது. அந்த வீடியோவின் விபரம்,

நயன்தாரா வகுப்பறையின் வாசலில் அமர்ந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சாக்லேட் கொடுத்துவிட்டு தனது கண்ணத்தில் முத்தமிடுமாறு கூறுகிறார். குழந்தைகளும் சந்தோஷமாக சாக்லேட்டை வாங்கிக் கொண்டு நயனின் கண்ணத்தில் முத்தமிடுகிறார்கள்.

இந்நிலையில் ஒரு ஆறு வயது பொடியன் மட்டும் நயன்தாராவின் முகத்தை பிடித்து உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுவிட்டு வெகுளியாக சிரிக்கிறான். நயன்தாராவோ சிறுவனின் செயலால் அதிர்ச்சி அடைந்து கண்கள் விரிய பார்க்கிறார்.

இதில் ஹைலைட் என்ன தெரியுமா? படம் வெளியான சில நாட்களில் அந்த சிறுவனின் தாயார் பேஸ்புக்கில் தனது மகனின் லிப்லாக் சாகஸத்தை புளகாங்கிதமாகப் பகிர்ந்திருந்தார். பின்னர் நிறையப் பேர் கலாய்ப்பது தெரிந்ததும், தூக்கிவிட்டார்!

English summary
Video of a six-year old boy kissing Nayanthara on her lips for the movie Thirunaal has gone viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil