வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் வருமா வராதா…? சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா… புலம்பும் விஜய் ரசிகர்கள்

சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என்றும், அதை விஜய் பாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. .

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்

தீபாவளிக்கு டிரஸ் எடுத்தாச்சா இல்லையா என்பதை விட ரசிகர்களின் பெரிய கவலையாக மாறியுள்ளது வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தான். விஜய் நடித்து வரும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக், தீபாவளிக்கு கண்டிப்பாக வெளியாகிவிடும் என கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக அப்டேட்கள் வெளியாகின. இந்தப் பாடலை விஜய்யே பாடியுள்ளதாகவும், இது ஆல்தோட்ட பூபதி பாடலின் ரீமிக்ஸ் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்தப் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என இசையமைப்பாளார் தமனே சொல்லிட்டதாக செய்திகள் வெளிவந்தன. இதனால், விஜய் ரசிகர்கள் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிளுடன் தீபாவளியை கொண்டாட தயாராக இருந்தனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இந்நிலையில், தற்போது வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகாது எனக் கூறப்படுகிறது. ரசிகர்கள் அனைவரும் வழிமேல் விழி வைத்து அபிஷியல் அப்டேட்டுக்காக காத்திருக்க, இப்போது தலையில் இடி விழுந்த மாதிரி... வாய்ப்பே இல்லை ராசா என்று சொல்லப்படுகிறதாம். வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி பற்றி இன்னும் படக்குழு முடிவுசெய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், தேவையில்லாமல் ரசிகர்கள் கொதிப்படைய வேண்டாம் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

போஸ்டர் மட்டும் தானா?

போஸ்டர் மட்டும் தானா?

அதேநேரம் ரசிகர்களுக்காக வாரிசு டீம் தீபாவளி ட்ரீட் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு பதில், வாரிசு படத்தில் இருந்து விஜய்யின் மாஸான போஸ்டர் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளனராம். இந்த போஸ்டர் வாரிசு ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் என சொல்லப்படுகிறது. வாரிசு பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில், ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. அஜித்தின் துணிவு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்பதால், வாரிசு படத்தை ஒருநாள் முன்னதாக வெளியிட முடிவாகியுள்ளதாம்.

தீபாவளிக்கு அப்டேட்

தீபாவளிக்கு அப்டேட்

அதனால், வாரிசு ரிலீஸ் தேதி ஜனவரி 11ம் தேதி தான் என்பதை கன்ஃபார்ம் செய்து, அதற்காக ஒரு போஸ்டரை வெளியிட போகிறார்களாம். அதன்பிறகே வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில், விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நிறைவுபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X