twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த பழைய செல்வராகவனைப் பார்க்க முடியுமா?

    By Shankar
    |

    செல்வராகவன்...

    பாலச்சந்தர் - மணிரத்னத்தின் கலவை என்று கொண்டாடப்பட்ட படைப்பாளி செல்வராகவனுக்கு இன்று பிறந்த நாள்.

    இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று எல்லோரும் யோசித்த காலத்தில், அதிர வைக்கும் வகையில் புதிய கதைகளோடு களமிறங்கியவர் செல்வராகவன்.

    ஹீரோ யாராக இருந்தால் என்ன? செல்வராகவன் இயக்குகிறாரா? படம் விற்றுவிடும் என்ற நிலையில் இருந்த முதல் தரமான இயக்குநரான அவர் இன்று திரைக் களத்தில் ஆயுதங்களை இழந்த வீரனாக தவித்துக் கொண்டிருக்கிறார். அவசரமாக அவருக்கு ஒரு வெற்றி தேவைப்படுகிறது.

    துள்ளுவதோ இளமை

    துள்ளுவதோ இளமை

    செல்வராகவன் இயக்கிய முதல்படம் துள்ளுவதோ இளமை. ஆனால் கஸ்தூரிராஜா பெயரில் வெளிவந்தது. அந்தப் படத்தைத் திட்டாத மீடியா இல்லை. ஆனால் படம் வெள்ளி விழா.

    காதல் கொண்டேன்

    காதல் கொண்டேன்

    அடுத்து காதல் கொண்டேன் படம் வந்தபோது தெரிந்துவிட்டது துள்ளுவதோ இளமையின் உண்மையான இயக்குநர் யார் என்பதை. காதல் கொண்டேன் தமிழ் சினிமாவின் மிக வித்தியாசமான படமாக அமைந்தது.

    புதுப்பேட்டை

    புதுப்பேட்டை

    அடுத்து யாரும் சிந்திக்காத புதிய கதைக் களத்தை எடுத்தார் புதுப்பேட்டையில். இன்று பலரும் சிலாகித்து கொண்டாடும் அந்தப் படம், அன்று சரியாகப் போகவில்லை. இதுதான் செல்வாவுக்கு கிடைத்த முதல் அடி.

    தெலுங்கு

    தெலுங்கு

    அந்த அடியை மறக்க அவர் தெலுங்குப் பக்கம் போனார். வெங்கடேஷ் - த்ரிஷாவை வைத்து அவர் இயக்கிய அந்த முதல் தெலுங்குப் படம் சில்வர் ஜூப்லி. அதுதான் தமிழில் யாரடி நீ மோகினியாக ரீமேக் ஆகி வென்றது.

    ஆயிரத்தில் ஒருவன்

    ஆயிரத்தில் ஒருவன்

    அடுத்து ஒரு பிரமாண்ட படைப்பை, முற்றிலும் வித்தியாசமாகத் தர வேண்டும் என முயன்றதன் விளைவுதான் ஆயிரத்தில் ஒருவன். இதில் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் யுவனைப் பிரிந்தார். இந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது.

    மயக்கம் என்ன?

    மயக்கம் என்ன?

    அந்தப் படத்துக்குப் பிறகு மயக்கம் என்ன என்ற படத்தை எடுத்தார். தொடர்ந்து இரண்டாம் உலகம். இரண்டுமே செல்வராகவன் எதிர்ப்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

    வெற்றி கைவருமா?

    வெற்றி கைவருமா?

    உடனடித் தேவை ஒரு வெற்றி என்ற சூழலில் சிம்புவை வைத்து அவர் ஆரம்பித்த கான் படம் பாதியில் கைவிடப்பட்டுள்ளது. அடுத்து என்ன படம் என்று தெரியாத சூழல்.

    திரும்ப பழைய செல்வாவா வாங்க...

    திரும்ப பழைய செல்வாவா வாங்க...

    ஆனால் நல்ல படைப்பாளிகள் இடையில் சில தோல்விகளால் சிரமப்பட்டாலும், மீண்டு வருவது திரையுலகம் பல முறை கண்ட உண்மை. அந்த வகையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் செல்வராகவன், அடுத்த பிறந்த நாளுக்குள் ஒரு வெற்றிப் படத்துடன் பயணத்தைத் தொடர்வதற்கான அறிகுறிகள் ஆரம்பமாகியுள்ளன.

    தம்பி உடையான் அஞ்சத் தேவையில்லை அல்லவா. செல்வாவுக்கு கைகொடுக்க தயாராகிவிட்டார் அவரது தம்பியும் இன்றைய நம்பர் ஒன் தயாரிப்பாளர்களுள் ஒருவருமான தனுஷ்.

    English summary
    Selvaraghavan, one of the finest filmmakers of this generation is making all his efforts to back to form in Kollywood with the help of his brother Dhanush.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X