விரக்தியிலும் பொன்னியின் செல்வனை பாராட்டிய செல்வராகவன்… ஏஆர் ரஹ்மானின் மியூசிக் அப்படி இருந்ததாம்!

சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் குறித்து செல்வராகவன் போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

வாகை சூடிய பொன்னியின் செல்வன்

வாகை சூடிய பொன்னியின் செல்வன்

கோலிவுட்டின் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்த பொன்னியின் செல்வன், தீபாவளி ரிலீஸுக்கு பின்னரும் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தப் படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். பொன்னியின் செல்வன் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

வைரலாகும் செல்வராகவன் ட்வீட்

வைரலாகும் செல்வராகவன் ட்வீட்

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள், பின்னணி இசை குறித்து பலரும் பாராட்டியிருந்த நிலையில், தற்போது இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார். அதில், "எனது அனுபவத்தில் பெஸ்ட் மியூசிக் ஆல்பம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஏஆர் ரஹ்மான், மணிரத்னம் கூட்டணியில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை மிகச் சிறிய இடத்தில் கூட நுட்பமாக கவனம் செலுத்துவது என்னை பிரம்மிக்க வைத்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். ஏஆர் ரஹ்மானின் இசையை செல்வராகவன் பாராட்டியுள்ளது ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

விரக்தியில் இருந்தாலும் பாராட்டு

விரக்தியில் இருந்தாலும் பாராட்டு

செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் நடித்திருந்த இந்தப் படம் சோழர் வரலாற்றை தழுவியே எடுக்கப்பட்டது. ஆனால், அப்போது பெரிய வெற்றிப் பெறாத நிலையில், ஆயிரத்தில் ஒருவன் செகண்ட் பார்ட் குறித்து ரசிகர்கள் இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் செகண்ட் பார்ட் விரைவில் உருவாகும் என செல்வராகவன் கூறியுள்ளார். ஆனாலும், அப்போதே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தால், ஆயிரத்தில் ஒருவன் செகண்ட் பார்ட் எடுத்திருப்பேன் என சில தினங்களுக்கு முன்னர் விரக்தியாக கூறியிருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ் ஹிட் மிஸ்ஸிங்

பாக்ஸ் ஆபிஸ் ஹிட் மிஸ்ஸிங்

சரியான நேரத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு வரவேற்பு கிடைத்திருந்தால், அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகிருக்கும். அதுமட்டும் இல்லாமல் இரண்டாம் பாகமும் உடனே தயாராகியிருக்கும் என்பதையே செல்வராகவனின் விரக்தியில் அறிய முடிந்தது. ஏனெனில் தற்போது சோழர்களின் வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் மேல் வசுலித்து சாதனைப் படைத்துள்ளது. இதனை சுட்டிக் காட்டும் விதமாக செல்வராகவன் தனது விரக்தியை வெளிப்படுத்தி இருந்தாலும், இப்போது பொன்னியின் செல்வன் பாடல்களையும் இசையையும் அவர் மனம் திறந்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X