»   »  செல்வராகவன் - எஸ்.ஜே.சூர்யாவின் 'நெஞ்சம் மறப்பதில்லை'

செல்வராகவன் - எஸ்.ஜே.சூர்யாவின் 'நெஞ்சம் மறப்பதில்லை'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படப்பிடிப்பு இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வராகவன், எஸ்.சூர்யா, கவுதம் மேனன் இந்த 3 இயக்குநர்களும் ஒன்றாக இணையும் புதிய படத்திற்கு நெஞ்சம் மறப்பதில்லை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் முதன்முறையாக எஸ்.சூர்யாவை, செல்வராகவன் இயக்க மற்றொரு இயக்குநரான கவுதம் மேனன் இப்படத்தை தயாரிக்கிறார்.

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

1963 ம் ஆண்டு மறைந்த இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் நெஞ்சம் மறப்பதில்லை. கல்யாண் குமார், தேவிகா, நாகேஷ் மற்றும் மனோரமா நடித்திருந்த இப்படமும் அதில் இடம்பெற்ற நெஞ்சம் மறப்பதில்லை பாடலும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

56 வருடங்களுக்கு

56 வருடங்களுக்கு

இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வந்து 56 வருடங்கள் கடந்த நிலையில் அந்தப் படத்தின் தலைப்பை தங்களது படத்திற்கு செல்வராகவன் சூட்டியிருக்கிறார். நெஞ்சம் மறப்பதில்லை படத்தைப் போல இப்படமும் திகில் படமென்பதால் இந்தப் பெயரை சூட்டியதாக கூறுகின்றனர்.

ரெஜினா, நந்திதா

ரெஜினா, நந்திதா

இந்தப் படத்தில் எஸ்.சூர்யாவிற்கு ஜோடியாக 'அட்டக்கத்தி' நந்திதா மற்றும் ரெஜினா என்று 2 நாயகிகளை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

ரீமேக் அல்ல

ரீமேக் அல்ல

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பெயரை மட்டுமே தாங்கள் சூட்டியிருப்பதாகவும், ரீமேக் எதுவும் செய்யவில்லை என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர். இந்தப் படத்திற்கான கதையை செல்வராகவன் எழுதியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

இதில் முதன்முறையாக செல்வராகவன் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணைகின்றது. தம்பி தனுஷின் கொடி படத்தைத் தொடர்ந்து அண்ணன் செல்வராகவன் படத்தையும் சந்தோஷ் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் மேனன்

கவுதம் மேனன்

இயக்குநர் கவுதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Selvaraghavan - SJ.Surya's Next Film has been Titled by Nenjam Marappathillai. Gautham Menon's Ondraga Entertainment will be Produced this Film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil