twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செல்வராகவனின் ’3 நொடி விதி’ பத்தி தெரியுமா.. ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் ‘என் ஜி கே’ சீக்ரெட்!

    நமக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் செல்வராகவன் எனப் பாராட்டியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

    By Staff
    |

    சென்னை: நமக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் இயக்குநர் செல்வராகவன் எனப் பாராட்டியுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படம் இம்மாத இறுதியில் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் சாய் பல்லவி ஒரு நாயகியாகவும், மற்றொரு நாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறுகையில்,

    அஜித், சூர்யா மாதிரியில்ல ஆர்யா.. சாயிஷா கொடுத்து வச்சவங்க தான்! அஜித், சூர்யா மாதிரியில்ல ஆர்யா.. சாயிஷா கொடுத்து வச்சவங்க தான்!

    வேறுபட்ட இயக்குநர்:

    வேறுபட்ட இயக்குநர்:

    செல்வராகவன் மற்ற இயக்குனர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார்.

    நடித்துக் காட்டுவார்:

    நடித்துக் காட்டுவார்:

    அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். பாடல் காட்சிகள் என்றால் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.

    நடிப்புப் பயிற்சி:

    நடிப்புப் பயிற்சி:

    படப்பிடிப்பு தளத்தில் யாரும் யாருடனும் பேச முடியாது. அவரவர் நடிக்கக் கூடிய வசனங்களையும், இங்கு நிற்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

    3 நொடி தாமத விதி:

    3 நொடி தாமத விதி:

    அதேபோல், 3 நொடி விதி என்று ஒன்றை வைத்திருக்கிறார். நடிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், எடிட்டிங் செய்யும்போது காட்சி தெளிவாக வருவதற்கு ஒருவர் வசனம் பேசி முடித்ததும், மற்றொருவர் உடனே ஆரம்பிக்கக் கூடாது. 3 நொடிகள் தாமதித்துத்தான் ஆரம்பிக்க வேண்டும்.

    டேக்கோ டேக்:

    டேக்கோ டேக்:

    ஒருவேளை அதை மறந்து விட்டு நடிக்க ஆரம்பித்தால், ‘கட்' சொல்லி திரும்ப ஆரம்பிக்கச் சொல்வார். எத்தனை முறை ‘டேக்' வாங்குகிறோம் என்று கணக்கு தெரியாது. முகத்தில் மட்டுமல்ல, உடலிலும் அந்த கதாபாத்திரம் வரும் வரை விடமாட்டார்.

    அன்பே பாடல்:

    அன்பே பாடல்:

    இப்படத்தில் வரும் 'அன்பே பேரன்பே' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக நான் நடித்த படங்களை படம் வெளியாகும் நாளில் திரையங்கத்திற்கு சென்று தான் பார்ப்பேன். இப்படத்தையும் மே 31 அன்று மும்பையில் தான் பார்ப்பேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Rakul preet singht opened the secret about NGK director Selvaraghavan's three second rules
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X