»   »  "சேதுபதி" வெளியீட்டால் சிக்கலில் விஜய் சேதுபதி

"சேதுபதி" வெளியீட்டால் சிக்கலில் விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சேதுபதி படத்தின் வெளியீடு காரணமாக நடிகர் விஜய் சேதுபதிக்கு புதிதாக பிரச்சினையொன்று முளைத்திருக்கிறது.இதனை அவர் எப்படி கையாளப் போகிறார் என்று கேள்வியும் தற்போது திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளன.

விஜய் சேதுபதியின் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் 'காதலும் கடந்து போகும்'. 'சூது கவ்வும்'படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை எடுத்திருக்கிறார்.

Sethupathi Release Date Announced

காதல் கதையாக உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற பிப்ரவரி 12 ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகிறது.விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் மற்றொரு படம் 'சேதுபதி'.

முதன்முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். பீட்சாவைத் தொடர்ந்து ரம்யா நம்பீசன் அவருக்கு மீண்டும் ஜோடியாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை வருகின்ற பிப்ரவரி 19 ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். அடுத்தடுத்து 1 வார இடைவெளியில் விஜய் சேதுபதியின் 2 படங்கள் வெளியாகின்றன.

இதனால் திரையரங்கு தொடங்கி பாக்ஸ் ஆபிஸ் வரை இவ்விரு படங்களும் மறைமுகமாக மோதிக்கொள்ளும் சூழல் தற்போது உருவாகியிருக்கிறது.

இதனால் இந்த சிக்கலை விஜய் சேதுபதி எப்படி கையாளப் போகிறார் என்ற கேள்வி தற்போது கோலிவுட்டினர் மத்தியில் எழுந்துள்ளது.

English summary
Vijay Sethupathi's 'Sethupathi' will hit Screens on February 19, His Another Movie 'Kadhalum Kadanthu Pogum' is also Scheduled for February 12.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil