அண்ணனா? ஃபிரண்டா?...விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் ஷாம் ரோல் இதுதானா?
சென்னை : டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் விஜய் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.
பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில் முக்கியமான காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, ஐதராபாத்தை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் தற்போது ஷுட்டிங் நடந்து வருகிறது.
ஆனால் வாரிசு படத்தின் ஷுட்டிங் போட்டோக்கள், வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.இதனால் விஜய் ரசிகர்கள் அப்செட் ஆகி வருகின்றனர். படக்குழுவினரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

சண்டைக்காட்சியில் ஷாம்
இந்நிலையில் தற்போது விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடத்தப்பட்ட ஷுட்டிங் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி செம வைரலானது. லேட்டஸ்ட் வீடியோவில் கப்பலில் இருக்கும் தொழிலாளர்கள் சிலருடன் விஜய் சண்டை போடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை காட்சியில் விஜய்யுடன் நடிகர் ஷாமும் உள்ளார்.

ஷாமின் ரோல் என்ன
இதுவரை வெளியான தகவல்களின்படி, படத்தில் விஜய்யின் அண்ணன் ரோலில் தான் ஷாம் நடிப்பதாக சொல்லப்பட்டது. கதைப்படி சரத்குமாருக்கு 3 மகன்கள் என்றும், ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் விஜய்யின் அண்ணன்களாக நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது சண்டைக்காட்சியில் விஜய்யுடன் சேர்ந்து ஷாமும் சண்டை போடுவது போல் காட்சி உள்ளது.

அண்ணனா? ஃபிரண்டா?
இதனால் படத்தில் ஷாம், விஜய்யின் அண்ணனா அல்லது ஃபிரண்டா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் நடித்த குஷி படத்தில் விஜய்யின் ஃபிரண்டாக சிறிய ரோலில் நடித்த ஷாம், தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளார்.

முதல் முறையாக விஜய் படத்தில்
ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, சரத்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். விஜய் படத்திற்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications











