Don't Miss!
- Finance
ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் இழப்பு.. Intel வீழ்ச்சி ஆரம்பமா..?
- News
சரவெடி.. ஓ இதுதான் பிளானா.. செந்தில் பாலாஜி யு.கே போனது இதுக்குத்தானா? வருகிறது செம அறிவிப்பு!
- Sports
பிரியாணி கிடைக்கலனா ஹோட்டலுக்கே போக மாட்டீங்களா? செய்தியாளர் கேள்விக்கு கடுப்பான வாசிங்டன் சுந்தர்
- Lifestyle
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- Automobiles
12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
- Technology
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
அமீர்கானுக்கு உதவி செய்ய போய் ஷாருக்கானுக்கும் வந்த தலைவலி.. அந்த 3 படமும் என்ன ஆகப்போகுதோ?
மும்பை: பாலிவுட்டில் பாய்காட் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகத்துக்கும் எச்சரிக்கையாக மாறி உள்ளது.
இந்துக்களின் நம்பிக்கையை அமீர்கான், கரீனா கபூர் புண்படுத்தி விட்டனர் என்றும் லால் சிங் சத்தாவை தியேட்டருக்குச் சென்று பார்க்கக் கூடாது என்றும் பாலிவுட் ரசிகர்கள் நடத்திய பாய்காட் டிரெண்டிங் இறுதியில் வென்று விட்டது.
இந்நிலையில், அமீர்கானுக்கு உதவி செய்த ஷாருக்கானின் படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் பாய்காட் பதான் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
“ஆப்கெல்லா ஐலசா பாணியில் அனன்யா பாண்டேவை அலேக்காக தூக்கிய விஜய் தேவரகொண்டா”: இப்படியும் ப்ரோமோஷனா?

ஜீரோ படத்தில் வாங்கிய அடி
ஏற்கனவே நடிகர் ஷாருக்கான் நடித்த ஃபேன், ஜீரோ உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், 4 ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் ரிலீஸ் செய்யாமல் உள்ளார். சமீபத்தில் வெளியான தி ராக்கெட்ரி மற்றும் அமீர்கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட படங்களில் கேமியோவாகவே தலை காட்டி உள்ளார்.

கேமியோ தான் பிரச்சனை
மாதவனின் ராக்கெட்டரி படத்தில் ஷாருக்கான் கேமியோவாக வந்ததை பலரும் பாராட்டினார்கள். அதே சமயம் லால் சிங் சத்தா படத்தில் ஷாருக்கான் கேமியோவாக வந்து நடனமாடி சென்ற நிலையில், அமீர்கானுக்கு எதிராக பாய்காட் டிரெண்டிங் செய்த ரசிகர்கள் தற்போது ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் உள்ளிட்ட படங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கொந்தளித்து வருகின்றனர்.

ஹ்ரித்திக் ரோஷனுக்கும் இதே நிலைமை
அமீர்கானின் லால் சிங் சத்தா படம் ஒரு சிறந்த திரை அனுபவம், நிச்சயம் ரசிகர்கள் அதை தியேட்டருக்கு சென்று பாருங்கள் என ஹ்ரித்திக் ரோஷன் போட்ட ஒரு ட்வீட்டுக்கே எதிர்வினையாற்றும் வகையில் விக்ரம் வேதா இந்தி டப்பிங் படத்தையே யூடியூப் மற்றும் ஜீ5 ஓடிடி தளத்தில் இலவசமாக பார்த்து விடுங்கள் என பாய்காட் விக்ரம் வேதாவை ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்

சிக்கலில் ஷாருக்கான்
இந்நிலையில், அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் கேமியோவாகவே நடித்து அவருக்கு சப்போர்ட் செய்துள்ள ஷாருக்கானும் இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டார் என்றும் பிகே படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிரானியின் டன்கி படத்திலும் ஷாருக்கான் நடித்து வருவதால், அடுத்த 3 படங்களையும் புறக்கணித்து பாடம் புகட்ட வேண்டும் என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விட்டுக் கொடுக்காத ரசிகர்கள்
அதே சமயம் நடிகர் ஷாருக்கானின் படத்துக்காக 4 ஆண்டுகள் காத்திருக்கும் ரசிகர்கள் அடுத்த ஆண்டு குடியரசு தினத்துக்கு வெளியாக உள்ள பதான் படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்த்து பிரம்மாண்ட வெற்றியடைய செய்வோம் என #PathaanFirstDayFirstShow ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், பாலிவுட்டை சல்மான் கான், அமீர்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் காப்பாற்ற முடியாத சூழலில் அதை ஷாருக்கான் செய்துக் காட்டுவார் என்கின்றனர்.

தடை ஒண்ணும் செய்யாது
அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கவில்லை என்றும், படம் வேற லெவலில் இருந்திருந்தால் நிச்சயம் பந்தயம் அடித்து இருக்கும் என்றும், வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள பதான் படம் எந்த படத்தின் ரீமேக்கும் இல்லாத நிலையில், பெரியளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்யும் என ஷாருக்கான் ரசிகர்கள் உறுதியாக கூறுகின்றனர்.