»   »  சென்னை சூப்பர் கிங்ஸ் தலையில் இடியை இறக்கப் பார்க்கிறாரே ஷாருக்கான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் தலையில் இடியை இறக்கப் பார்க்கிறாரே ஷாருக்கான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் ஏலத்திற்கு டோணி வந்தால் அவரை வாங்க தனது பேண்ட்டை கூட விற்கத் தயார் என்று பாலிவுட் நடிகரும், கொல்கத்தா அணி உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

கூல் கேப்டன் டோணி ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி வெற்றி பெற உதவியவர் டோணி.

இந்நிலையில் டோணியை வாங்க ஆசைப்படுகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

டோணி

டோணி

டோணியை வாங்க என் பேண்ட்டை கூட விற்கத் தயார். ஆனால் அதற்கு முதலில் டோணி ஏலத்தில் வர வேண்டுமே. அவர் ஏலத்தில் வருவது இல்லை என்று பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

ஏலம்

ஏலம்

டோணி, விராட் கோஹ்லி ஆகியோர் அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் வருவார்கள். என்ன விலை கொடுத்தாவது அவர்களை ஏலத்தில் எடுக்க பலரும் தயாராகி வருகிறார்கள்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

தடை முடிந்து அடுத்த ஆண்டு களத்தில் குதிக்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் டோணியே வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

டோணியை வேறு யாருக்கும் சீனிவாசன் தர மாட்டார் என்று சென்னை ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். இந்நிலையில் டோணியை கொல்கத்தா அணிக்கு எடுக்கத் துடிக்கிறார் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actor cum Kolkata Knight Riders team owner Shah Rukh Khan said that he is ready to sell his pyjama to buy Dhoni for his team.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil