For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சூரரை போற்று இந்தி ரீமேக்...ரூ.30 கோடி சம்பளம் கேட்ட மாஸ் ஹீரோ

  |

  மும்பை : நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்ட படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த படம்.

  பாலிவுட் வாய்ப்பு குவியுதுன்னு சொன்னாங்களே அந்த ரியாலிட்டி நடிகை.. அது என்ன மேட்டருன்னு தெரியுமா?பாலிவுட் வாய்ப்பு குவியுதுன்னு சொன்னாங்களே அந்த ரியாலிட்டி நடிகை.. அது என்ன மேட்டருன்னு தெரியுமா?

  ஒரு ரூபாயில் சாமானிய மக்களுக்கும் விமான பயணத்தை சாத்தியமாக்க போராடும் இளைஞன். அவர் சந்திக்கும் பிரச்சனைகள், அரசியல் சதிகள் ஆகியவற்றை தாண்டி எப்படி சாதிக்கிறார் என்பதை காட்டுவதாக இந்த படம் அமைக்கப்பட்டுள்ளது. இதை காதல் கலந்து சொல்லப்பட்டிருக்கும் படம் தான் சூரரைப் போற்று.

  ஆஸ்கார் பரிந்துரைக்கு சென்ற படம்

  ஆஸ்கார் பரிந்துரைக்கு சென்ற படம்

  இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கிய இந்த படத்தில் சூர்யா, அபர்னா பாலமுரளி, கர்ணாஸ், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தென்னிந்திய படங்களிலேயே மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்த படம், சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றது. இந்த ஆண்டு ஆஸ்கார் விருதிற்கும் இந்தியா சார்பில் சூரரைப் போற்று படம் பரிந்துரைக்கப்பட்டது.

  இந்தியில் ரீமேக்காகும் சூரரைப் போற்று

  இந்தியில் ரீமேக்காகும் சூரரைப் போற்று

  சூரரைப் போற்றியின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த படத்தையும் சுதாவே இயக்க போவதாகவும், சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தி ரீமேக்கிலும் ஹீரோவான மாறன் கேரக்டரில் சூர்யாவே நடிக்க உள்ளதாக முதலில் தகவல் பரவியது.

  அக்ஷய் குமார் தான் முதல் தேர்வு

  அக்ஷய் குமார் தான் முதல் தேர்வு

  ஆனால் தற்போது ஷாகிப் கபூரை ஹீரோவாக நடிக்க வைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதலில் அக்ஷய்குமாரை நடிக்க வைக்கத்தான் படக்குழு முயற்சிக்கப்பட்டதாம். இது பான் இந்தியா படம் என்பதால் அனைவருக்கும் தெரிந்த மிக பிரபலமான ஒருவரை நடிக்க வைக்கவே, படத்தின் ரீமேக் உரிமத்தை பெற்ற சூர்யா மற்றும் கனீத் மோங்கா நினைத்துள்ளனர்.

  கால்ஷீட் பிரச்சனையா

  கால்ஷீட் பிரச்சனையா

  அதிகமான ரீமேக் படங்களில் நடித்தவர் என்பதால் அக்ஷய் குமாரை நடிக்க வைக்க பேசப்பட்டதாம். அக்ஷய் குமாருக்கும் இதில் நடிக்க விருப்பம் தானாம். ஆனால் ஏற்கனவே பல படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டதால், கால்ஷீட் ஒத்துவராததால் அவரால் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம்.

  என்னது இவ்வளவு சம்பளமா

  என்னது இவ்வளவு சம்பளமா

  அதன் பிறகு தான் ஷாகித் குமாரிடம் பேசி உள்ளனர். அவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்த படத்தில் நடிக்க ரூ.30 கோடிக்கும் அதிகமாக சம்பளமும், படத்தின் வசூலில் பங்கும் கேட்டுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த தயாரிப்பாளர்கள், ஷாகித் குமாரை சம்மதிக்க வைக்க பலமுறை முயற்சித்தும், அவர் பிடிவாதமாக கூறி விட்டாராம்.

  பிடிவாதமாக இருந்த ஷாகித் கபூர்

  பிடிவாதமாக இருந்த ஷாகித் கபூர்

  ஷாகித் கபூர் தற்போது கபீர் சிங் ரீமேக்கில் நடித்து வருகிறார். இது அவரது இமேஜை பெரிய அளவிற்கு கொண்டு செல்லும் என கருதப்படுகிறது. அதோடு அவர் நடித்த மற்றொரு ரீமேக்கான ஜெர்சி படமும் ரிலீசுக்காக தயாராக உள்ளது. ஒருவேளை இவர்கள் இருவருமே ஒத்து வராவிட்டால் வேறு மாஸ் ஹீரோவை நடிக்க வைக்கலாம் அல்லது சூர்யாவே நடிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  சூர்யா நடிக்க வாய்ப்புள்ளதா

  சூர்யா நடிக்க வாய்ப்புள்ளதா

  அதனால் அக்ஷய் குமாரிடம் மீண்டும் பேசி ஒரு மாத காலத்தில் ஷுட்டிங்கை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அக்ஷய் குமாருக்கு ரசிகர் கூட்டம் அதிகம் என்பதால் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Sources said that shahid kapoor asked rs.30 cr and share from profit for acting in soorarai pottru hindi remake. because of this reason akshay kumar might be replace his role. at the same time akshay kumar already commited in many big projects.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X