சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யான்...வீட்டில் ஷாருக்கான் மனைவி போட்ட புதிய உத்தரவு
மும்பை : ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யான் கான். இவர் அக்டோபர் 2 ம் தேதி தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தியதாக தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பலமுறை ஜாமினுக்காக விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் ஆர்யானுக்கு ஜாமின் தர மும்பை செசன்ஸ் கோர்ட் இதுவரை நான்கு முறை மறுத்து விட்டது. அக்டோபர் 20 ம் தேதி வரை ஆர்யானின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20 ம் தேதி ஆர்யானின் ஜாமின் மனு மீதான விசாரணையும் நடைபெற உள்ளது.

சிறையில் தவிக்கும் ஆர்யான்
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யான், அந்த சூழலில் வாழ மிகவும் சிரமப்பட்டு வருகிறாராம். சிறையில் கொடுக்கும் உணவையும் அவர் சாப்பிட மறுப்பதால், அவரின் உடல்நிலை குறித்து சிறை அதிகாரிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். சிறை கேன்டீனில் அவருக்கு தேவையான உணவுகளை வாங்கிக் கொள்ள ஷாருக்கான் ரூ.4500 மணியார்டர் அனுப்பி வைத்துள்ளார்.

ஆர்யானுக்கு கவுன்சிலிங்
சமீபத்தில் ஆர்யான், தனது பெற்றோருடன் 10 நிமிடங்கள் வீடியோ காலில் பேச அனுமதித்துள்ளனர். அப்போது ஆர்யான், பெற்றோரை பார்த்து கண் கலங்கியதாக கூறப்படுகிறது. சிறையில் ஆர்யானுக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதில், தான் ரிலீஸ் ஆகி வெளியே சென்றதும் ஏழைகளுக்கு உதவ போவதாக வாக்குறுதி அளித்துள்ளாராம்.

மனமுடைந்த கவுரி கான்
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, ஆர்யான் சிறைக்கு சென்ற பிறகு ஷாருக்கானும், அவரது மனைவி கவுரியும் சரியாக தூங்குவதோ, சாப்பிடுவதோ இல்லையாம். மகனின் இந்த திடீர் கைது, இத்தனை நாட்கள் சிறையில் இருப்பார் என்பதை எதிர்பார்க்காத கவுரி, இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனமுடைந்து போய் உள்ளாராம்.

கவுரி போட்ட உத்தரவு
மகன் ஆர்யானுக்கு விரைவில் ஜாமின் கிடைக்க கவுரி, ஓயாமல் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கிறாராம். ஆர்யான் சிறையில் இருந்து வீட்டிற்கு திரும்பி வரும் வரை வீட்டில் எந்த இனிப்பு வகைகள், ஆர்யானுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைக்க கூடாது என வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கடுமையான உத்தரவு போட்டுள்ளாராம் கவுரி. இனிப்பு தயாரிப்பது தன்னால் கண்ணில் பட்டால் அதை உடனடியாக நிறுத்தி விடுகிறாராம்.

தவிக்கும் ஷாருக்கான்
மற்றொரு புறம் ஷாருக்கான், மனமுடைந்து, என்ன செய்வதென தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம். நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என யாரையும் வீட்டிற்கு வர வேண்டாம் என சொல்லி விட்டாராம் ஷாருக்கான். இந்த கடுமையான சமயங்களில் தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளாராம். போனில் மட்டுமே தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அவர் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











