»   »  சென்னையில் உயிரிழந்த பாடகி ஷான் ஜான்சனின் மரணம் இயற்கையே: பிரேத பரிசோதனை அறிக்கை

சென்னையில் உயிரிழந்த பாடகி ஷான் ஜான்சனின் மரணம் இயற்கையே: பிரேத பரிசோதனை அறிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் பாடகி ஷான் ஜான்சன் மாரடைப்பால் மரணம் அடைந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

மலையாள திரையுலகின் பிரபல இசையமைப்பாளராக இருந்து மறைந்த ஜான்சன் மாஸ்டரின் மகள் ஷான் ஜான்சன்(29). தந்தையின் வழியில் இசை மீது ஆர்வம் கொண்டவர். அவர் படங்களில் பாடல்கள் பாடி வந்தார்.

சென்னை கோடம்பாகத்தில் தங்கி பாடல்கள் பாடி வந்தார். பாடுவது தவிர அவரே பாடலும் எழுதி வந்தார்.

திருமணம்

திருமணம்

ஏற்கனவே திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெற்ற ஷானுக்கு இரண்டாவது முறையாக திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக அவரும், அவரது தாய் ராணியும்(55) நேற்று முன்தினம் கொச்சிக்கு செல்வதாக இருந்தது.

மரணம்

மரணம்

திருமணத்திற்காக கொச்சிக்கு செல்லும் முன்பு கடந்த 5ம் தேதி ஷான் தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருக்கும் என்று கருதப்பட்டது.

திடீர் என

திடீர் என

வியாழக்கிழமை இரவு பாட்டு பாடிவிட்டு வீட்டிற்கு வந்த அவர் வெள்ளிக்கிழமையும் ஸ்டுடியோவுக்கு சென்று பாட வேண்டி இருந்த நிலையில் இறந்து கிடந்தார்.

மாரடைப்பு

மாரடைப்பு

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷானின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது.

இறுதிச் சடங்கு

இறுதிச் சடங்கு

பிரேத பரிசோதனைக்கு பிறகு ஷானின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் ஷானின் உடல் நேற்று மதியம் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

English summary
According to autopsy reports, playback singer Shan Johnson died of cardiac arrest at the age of 29.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil