நம்பர் ஒன் நம்பர் டூ வேண்டுமா.. கடைசியில் உட்கார வைத்து கதிகலங்க வைத்த கமல்.. எவிக்ஷன் இவர் தான்!
சென்னை: ரேங்கிங் டாஸ்க்கில் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தையும் பிடித்துக் கொண்டிருந்த இரு போட்டியாளர்களும் கடைசியில் டேஞ்சர் ஜோனில் கலங்கி நின்ற காட்சிகள் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஹைலைட்டாக இருந்தன.
குயின்ஸி, ஷெரினா, ஷிவின் என போட்டியாளர்கள் வரிசையாக சேவ் செய்யப்பட்ட போதே விஜே மகேஸ்வரிக்கு பயம் வந்து விட்டது.
கவர்ச்சியாக உடை அணிந்து பிக் பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தினாலும் ஒரு பயலும் ஓட்டுப் போடவில்லையா என்கிற எண்ணம் அவரை வாட்டி வதைத்ததை தெளிவாகவே பார்க்க முடிந்தது.

தப்பித்த ஷிவின்
நமீதா மாரிமுத்து கடந்த சீசன் முதல் வாரத்திலேயே வெளியேறிய நிலையில், இந்த சீசனில் ஷிவின் 2வது வாரத்தில் அனுப்பப்படுவாரா என சில ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், டேஞ்சர் ஜோனில் இருந்த ஷிவின் கடைசி 3 பேரில் ஒருவராக இருந்த போது சேவ் ஆனார். ஷிவின் இன்னமும் போல்டாக தனது ஆட்டத்தை அடுத்த வாரத்தில் ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மரண பயத்தில் மகேஸ்வரி
ஷிவின் சேவ் என்று சொன்னதுமே அதுவரை அசால்ட்டு தைரியத்தில் இருந்து வந்த மகேஸ்வரிக்கு மரண பயம் வந்து விட்டது. எங்கே நம்மை தான் முதல் எவிக்ஷனாக வெளியே அனுப்பிவிடுவாரோ கமல் என நினைத்துக் கொண்டிருந்தார். மகேஸ்வரியை போலவே சாந்தியும் எவ்ளோ சமைச்சு போட்டும் ஒருத்தனும் ஓட்டுப் போடலையே என நினைத்து வாடினார்.

முதல் எவிக்ஷன்
இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சாந்தி தான் முதல் எவிக்ட் ஆவார் என்பது கருத்து கணிப்பிலேயே தெரிந்து விட்டது. சனிக்கிழமை ஷூட்டிங் முடிந்ததுமே தகவல்கள் வெளியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஷோவில் அதிகாரப்பூர்வமாக சாந்தி வெளியேறிய காட்சிகள் ரசிகர்களை சற்றே வருத்தமடைய செய்தது. ஒரு அம்மாவை போல பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முதல் எவிக்ஷனாக வெளியே அனுப்பிட்டாங்களே என உப்புமா பிரியர்கள் ஃபீல் செய்தனர்.

நம்பர் ஒன் நம்பர் டூ
நான் தான் நம்பர் ஒன், நான் தான் நம்பர் டூ என முதல் இரு இடத்தை ரேங்கிங் டாஸ்க்கில் பிடித்த மகேஸ்வரி மற்றும் சாந்தி கடைசி இருவராக வோட்டிங் லிஸ்ட்டில் இருந்ததை கமல்ஹாசன் சுட்டிக் காட்டினார். வயசானவங்களை வெளியே அனுப்பிடுவீங்களே என்கிற ஃபீலிங்கை கமலிடமே தைரியமாக சாந்தி பேசிய இடங்கள் அவர் சமையலை சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்த ஏகப்பட்ட மிக்சர்கள் இன்னமும் உள்ளே இருப்பது காட்சிப் பொருளாகத்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என கமெண்ட்டுகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











