»   »  சன்னி லியோனை ஓவர்டேக் செய்த 'வரைபடம்' ஹீரோயின்

சன்னி லியோனை ஓவர்டேக் செய்த 'வரைபடம்' ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீன மொழியில் எடுக்கப்படும் வெப்சீரீஸ் மற்றும் டிவி தொடரில் சன்னி லியோனுக்கு பதில் சான்வி ஸ்ரீவஸ்தவா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் நடித்து வருபவர் சான்வி ஸ்ரீவஸ்தவா. அவர் தமிழில் வரைபடம் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் சீன மொழியில் எடுக்கப்படும் வெப்சீரீஸ் மற்றும் டிவி தொடரான தி டார்க் லார்டில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்த தொடரில் சான்வி இந்திய இளவரசியாக நடிக்கிறார்.

சான்வி

சான்வி

தி டார்க் லார்ட் தொடரில் இந்திய இளவரசியாக நடிக்க சன்னி லியோனை தான் தேர்வு செய்தார்கள். ஆனால் அவரை விட சான்வியின் முகம் தான் இந்திய இளவரசிக்கு பொருத்தமாக உள்ளது என்று கருதி அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தொலைக்காட்சி தொடர்

தொலைக்காட்சி தொடர்

தி டார்க் லார்ட் தொடருக்காக சீன மொழி கற்றுள்ளார் சான்வி. கடந்த மாதம் அவர் சீனா சென்று ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். குவாங்சூவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் அவர் நடித்தார்.

வித்தியாசம்

வித்தியாசம்

நான் வசனங்களை எளிதில் கற்றுக் கொள்வேன். இந்நிலையில் சீன மொழியில் வசனம் பேசியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று சான்வி தெரிவித்துள்ளார்.

சீனர்கள்

சீனர்கள்

சீன தொலைக்காட்சி தொடர் மற்றும் வெப்சீரிஸில் நடித்தது பெருமையாக உள்ளது. சீனர்கள் மூளைக்காரர்கள் மட்டும் அல்ல வேலைக்காரர்களும் கூட. அந்த ஷூட்டிங்கை மறக்க முடியாது என்கிறார் சான்வி.

English summary
Makers of Chinese web series and television show titled The Dark Lord have chosen Varaipadam heroine Shanvi Srivastava over Sunny Leone to play the role of an Indian princess.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil