திரெளபதி படத்தில் நடிச்சது ஒரு கெட்ட கனவு.. ஷீலா ராஜ்குமார் பேட்டி.. அப்போ அப்படி பேசுனீங்களே?

சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரெளபதி படத்தில் ஹீரோயினாக ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அந்த படத்தில் நடித்தது கெட்ட கனவா இருக்கு என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்நிலையில், திரெளபதி படத்திற்கு புரமோஷன் பண்ணும் போது அவர் பேசிய பழைய வீடியோவை போட்டு மோகன் ஜி ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

ஷீலா ராஜ்குமார்

ஷீலா ராஜ்குமார்

ஆறாது சினம், டூ லெட், மனுசங்கடா, அசுரவதம், கும்பலாங்கி நைட்ஸ், நம்ம வீட்டுப் பிள்ளை, திரெளபதி, மண்டேலா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். அடுத்ததாக பர்முடா மற்றும் மாயத்திரை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சமீப காலமாக நடிகைகள் பேசினாலே சர்ச்சையில் சிக்கி விடுவது தொடர்கதையாக மாறி வருகிறது.

திரெளபதில நடிச்சது கெட்ட கனவு

திரெளபதில நடிச்சது கெட்ட கனவு

அந்த பேட்டியில் சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து வரும் நீங்கள், திரெளபதி படத்தில் நடிச்சது பற்றி எப்படி பார்க்குறீங்க? என்கிற கேள்விக்கு, அது ஒரு கெட்ட கனவு மாதிரி இருக்கு. இயக்குநர் தனக்கு முழு கதையையும் சொல்லவில்லை. தன்னை ஏமாற்றி படமெடுத்து வெளியிட்டு விட்டார் என்கிற ரீதியில் ஷீலா ராஜ்குமார் பேசியது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

மோகன் ஜி இயக்கத்தில்

மோகன் ஜி இயக்கத்தில்

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் 2020ம் ஆண்டு நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான திரெளபதி திரைப்படம் நாடக காதலை அடிப்படையாக வெளியானது. பெரிய வீட்டுப் பெண்களை காதலிப்பது போல ஏமாற்றுபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சில இயக்குநர்கள் மோகன் ஜி உடன் நேரடியாக சண்டையே போட்டனர். விஜய் டிவி, அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்துக்கும் ஆதரவும் எதிர்ப்புகளும் கலந்த வண்ணம் இருந்தன.

அப்போ அப்படி பேசுனீங்க

அப்போ அப்படி பேசுனீங்க

ஷீலா ராஜ்குமார் இப்படி பேசியதும் மோகன் ஜி ரசிகர்கள் சண்டைக்கே வந்து விட்டனர். திரெளபதி படம் வெளியாவதற்கு முன்னதாக இதே ஷீலா ராஜ்குமார் அந்த படத்திற்கான புரமோஷன் வீடியோவில், இயக்குநர் கதை சொல்லும் போது பெண்களுக்கான வலிமையான கதையாக இருந்தது. இந்த படத்தை நிச்சயம் அப்பாக்கள் பெண் பிள்ளைகளுடன் வந்து தியேட்டரில் பார்க்கலாம் என அளந்து விட்டு இருந்ததை அதே வீடியோவுக்கு கீழ் எடுத்துப் போட்டு விளாசி வருகின்றனர்.

திட்டும் ரசிகர்கள்

திட்டும் ரசிகர்கள்

புதிய படத்துக்கான புரமோஷனுக்காக பழைய படத்தை மட்டம் தட்டிப் பேசுவது இப்போ எல்லாம் நடிகைகளுக்கு ஃபேஷன் ஆகி விட்டது என ரசிகர்கள் திட்டி வருகின்றனர். படம் வெளியாகும் முன்னதாக அந்த நடிகைக்கு எதுவும் தெரிந்திருக்காது என்றும் தற்போது அதன் பின் விளைவுகள் தெரிந்த பிறகு இப்படி பேசுகிறார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

பகாசூரன்

பகாசூரன்

திரெளபதி படத்திற்கு பிறகு கெளதம் மேனன், ரிச்சர்ட் ரிஷி மற்றும் தர்ஷா குப்தா நடிப்பில் ருத்ர தாண்டவம் படம் வெளியானது. தற்போது செல்வராகவன் மற்றும் கர்ணன் படத்தில் நடித்த நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி உள்ள பகாசூரன் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி. இந்நிலையில், அவரது முதல் படத்தின் நாயகி இப்படி அவர் படத்தை பற்றி பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X