twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவங்க மட்டும்தான் சிறந்த நடிகர்களா? அப்ப இவங்கலாம் யாரு? தனுஷ் இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

    By
    |

    மும்பை: அவர்களை மட்டும் சிறந்த நடிகர்கள் என்று எப்படி சொல்லலாம் என தனுஷ் பட இயக்குனருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    Recommended Video

    Live: என்னால தூங்க முடியல A. R. Rahman emotional live video

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

    நெபோடிசம்

    நெபோடிசம்

    மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட்டில், நெபோடிசம் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் சோனாக்‌ஷி சின்ஹா உட்பட சில நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகினர்.

    இயக்குனர் ஆர்.பால்கி

    இயக்குனர் ஆர்.பால்கி

    இந்நிலையில், இதுபற்றி கருத்துத் தெரிவித்த இயக்குனர் ஆர்.பால்கி, இது முட்டாள்தனமான வாதம் என்றார். இவர் அமிதாப்பச்சன் நடித்த சீனி கம், பா, தனுஷ், அமிதாப்பச்சன், அக்‌ஷரா ஹாசன் நடித்த ஷமிதாப், அக்‌ஷய்குமார் நடித்த பேட்மேன் உட்பட சில இந்திப் படங்களை இயக்கியவர். அவர் கூறும்போது, இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. காய்கறி விற்பவர் கூட தங்களுக்கு அடுத்து தங்கள் தொழிலை தங்கள் வாரிசுகளிடம் கொடுக்கிறார்கள்.

    ஆலியா பட், ரன்பீர் கபூர்

    ஆலியா பட், ரன்பீர் கபூர்

    சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இது இருக்கிறது. ஆலியா பட், ரன்பீர் கபூரை விட சிறந்த நடிகர், நடிகையை கண்டுபிடியுங்க பார்க்கலாம் என்று நாங்கள் வாதிட வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற சிறந்த நடிகர்களை அப்படி சொல்வது நியாயமற்றது' என்று கூறியிருந்தார்
    இது பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரன்பீர் கபூர், ஆலியா பட்-டை விட சிறந்த நடிகர்கள் இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.

    நாடகத்தில் இருந்து

    நாடகத்தில் இருந்து

    இதுபற்றி பிரபல இயக்குனர் சேகர் கபூர் கூறும்போது, 'பால்கி, உங்கள் மேல் அதிக மரியாதை இருக்கிறது. ஆனால் சுஷாந்த் சிங் நடித்துள்ள கை போ சே படத்தை நேற்று மீண்டும் பார்த்தேன். மூன்று புதிய நடிகர்கள். ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்போது சிறந்த நடிகர்கள், நாடகத்தில் இருந்து வருகிறார்கள். அவர்கள் மீது நம்பிக்கையும் மரியாதையும் இருக்கிறது.

    டேனியல் கிரேக்

    டேனியல் கிரேக்

    நான் இயக்கிய பண்டிட் குயின் படத்தில் பணியாற்றிய நசீர், ஷபானா, சதீஷ் கவுசி, சீமா பிஸ்வாஸ் உட்பட பலர் நாடகத்தில் இருந்து வந்தவர்கள்தான். கேத் பிளான்செட், ஜியாஃப்ரி ரஷ், டேனியல் கிரேக் உட்பட பலர் நாடகத்தில் இருந்து வந்தவர்கள்தான்' என்று கூறியுள்ளார். இவரை போல மேலும் பலரும் ஆர்.பால்கியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரன்பீர் கபூர், ஆலியா சிறந்த நடிகர்கள்தான். அவர்கள் மட்டுமே சிறந்த நடிகர்கள் இல்லை என்று பல சினிமா பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Filmmaker Shekhar Kapur has reacted to director R Balki’s latest comments on the acting chops of actor Alia Bhatt and Ranbir Kapoor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X