For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் எப்படி டிரெஸ் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.. ஹேட்டர்களை வெளுத்து வாங்கிய பிக் பாஸ் பிரபலம்!

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி, நெட்டிசன்களுக்கு சவுக்கடி வார்னிங் கொடுத்துள்ளார் நடிகை ஷிவானி நாராயணன்.

  இந்த ஆண்டு பிக் பாஸ் சீசனில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டியாளராக ஷிவானி உள்ளார்.

  தனது இன்ஸ்டா பக்கத்தில் வழக்கம் போல போட்டோ போட்ட அவர் அதிரடி எச்சரிக்கை பதிவையும் போட்டுள்ளார்.

  வக்கிரத்தின் உச்சம்.. இவ்ளோ பச்சையாவா.. கேவலம்.. இரண்டாம் குத்து போஸ்டரை காரி துப்பும் நெட்டிசன்ஸ்!

  ஒரு நாள் தான் இருக்கு

  ஒரு நாள் தான் இருக்கு

  பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. வரும் ஞாயிறு மாலை 6 மணி முதல் பிக் பாஸ் தமிழ் 4ம் சீசனை அடுத்த 100 நாட்களுக்கு ரசிகர்கள் கண்டு ரசிக்க உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஷிவானி நாராயணனும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  கவர்ச்சி போட்டோக்கள்

  கவர்ச்சி போட்டோக்கள்

  பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சிகரமான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தினமும் 5 மணிக்கு போட்டோ போட்டு வந்த அவரை 5 மணி பஸ் என்றும் கிண்டல் செய்தனர். அதன் பின்னர், நேரத்தை மாற்றி மாற்றி பதிவுகளை போட்டு வருகிறார்.

  ஆபாச கமெண்ட்ஸ்

  ஆபாச கமெண்ட்ஸ்

  உள்ளாடை தெரியும்படியும், சட்டை பட்டன்களை கழட்டி விட்டபடியும், முன்னழகு, பின்னழகு என கவர்ச்சி பொங்க நடிகை ஷிவானி பதிவிடும் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்கள், மோசமாகவும், ஆபாசமாகவும், அவரது உடல் பாகங்களை வர்ணித்தும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

  சவுக்கடி பதில்

  சவுக்கடி பதில்

  இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக தனது இன்ஸ்டாகிராமில் டிவிக்கு அருகே அமர்ந்து கொண்டு, நடிகை ஷிவானி நாராயணன் எடுத்த செம ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டு, தன்னை ட்ரோல் செய்யும் நெட்டிசன்களுக்கு மிக நீண்ட சவுக்கடி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

  அது என் இஷ்டம்

  அது என் இஷ்டம்

  இந்த பதிவு 3ம் தரமான கீழ்தரமான கமெண்ட்டுகளை பதிவிடுபவர்களுக்காக, நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது எனக்குத் தெரியும், நீங்க ஒண்ணும் எனக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்க வேண்டாம். என் பெற்றோர்கள் என்னை நன்றாகத்தான் வளர்த்துள்ளார்கள். சுயமாக சிந்திக்கவும், சுதந்திரமாக செயல்படவும் எனக்கு சொல்லிக் கொடுத்துருக்காங்க, அப்படி டிரெஸ் பண்ணாத, இப்படி இருக்காதா என மோசமாக கமெண்ட் செய்யும் உங்க கீழ்த்தரமான மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.

  யாரையும் அட்ராக்ட் பண்ண அல்ல

  யாரையும் அட்ராக்ட் பண்ண அல்ல

  நான் பதிவிடும் போட்டோக்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்கள் எல்லாமே எனக்கு பிடிச்சுத் தான் பண்றேன். யாரையும் அட்ராக்ட் பண்ண அல்ல, எதற்காகவும், யாரையும் கவர வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை. அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல், உங்க வேலையை நீங்க பாருங்க என வெளுத்து வாங்கி உள்ளார்.

  விஜே சித்ராவுடன் சண்டை

  விஜே சித்ராவுடன் சண்டை

  சமீபத்தில் விஜய் டிவி சீரியல் நடிகையான விஜே சித்ரா, பிட்டு படம் பார்க்க வேண்டுமானால், ஷிவானி இன்ஸ்டாவுக்கு செல்லுங்கள் என மறைமுகமாக பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார். அதற்கு, மற்றவர்களை பற்றி பேசுவதற்கு முன்னதாக, முதலில் உன் முதுகை பாரு என ஷிவானி கொடுத்த பதிலடி சமூக வலைதளத்தில் பெரிய சண்டையையே உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

  தாராளமா போட்டோஸ் போடுங்க

  தாராளமா போட்டோஸ் போடுங்க

  ஷிவானி நாராயணின் இந்த பதிவையும் பல நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். நீங்க இன்னும் பிக்பாஸ் வீட்டுக்கு போகலையா என்றும், யாரு செல்லம் உன்னை தப்பா சொல்றது. நீ இஷ்டத்துக்கு இன்னும் தாராளமா டிரெஸ் பண்ணி போட்டோஸ் போடு என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

  Shivani Narayanan Classy dance for Suriya Kattu Payale song
  2 மில்லியன் ரசிகர்கள்

  2 மில்லியன் ரசிகர்கள்

  டிவி நடிகையான ஷிவானி நாராயணன், கடந்த 4 மாத லாக்டவுனில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பதிவிட்டு 2 மில்லியனுக்கும் மேல் ரசிகர்களை சேர்த்து விட்டார். இன்னும் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று வந்தால், அவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரிக்கும் என்பதில் எந்தவொரு டவுட்டும் வேண்டாம்.

  English summary
  Shivani Narayanan insta post, “This post is To all those creeps who are posting 3rd rate comments on my comment section as well to some troll pages on YouTube who earn money and live out of making cheap contents on others.”
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X