For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன ஷிவானி சிக்ஸ் பேக் எல்லாம் தெரியுது.. சட்டையை கழட்டி அப்படியொரு போஸ்.. ஆடிப்போன ஃபேன்ஸ்!

  |

  சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் சட்டையை கழட்டி உள்ளாடையுடன் செம ஹாட்டாக கொடுத்திருக்கும் போஸ் இணையத்தை சூடாக்கி உள்ளது.

  பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன்.

  7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி கிராண்ட் ஃபினாலே வாரத்துக்கு முன்னதாக எவிக்ட் ஆகி வெளியேறினார்.

  போட்டோ போட்டே

  போட்டோ போட்டே

  விஜய் டிவி சீரியலில் நடித்ததை விட இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டே பிரபலமானவர் ஷிவானி நாராயணன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போதே 2 மில்லியன் ரசிகர்களை கொண்டிருந்த ஷிவானிக்கு இப்போ 2.6 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். சீக்கிரமே 3 மில்லியன் இன்ஸ்டா ஃபேமிலி என கேக் வெட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  ரொம்ப சின்னப் பொண்ணு

  ரொம்ப சின்னப் பொண்ணு

  வெறும் 19 வயசு தான் ஷிவானிக்கு ஆகிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்த பிரபலங்களிலேயே மிகவும் இளம் வயது போட்டியாளர் ஷிவானி தான் என கமல்ஹாசன் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தினார். அதன் காரணமாகவே பெரிதாக யாரிடத்திலும் சண்டை போடாமலும், பேசாமலும் அமைதியாக இருந்து வந்தார் ஷிவானி.

  பட வாய்ப்புகள்

  பட வாய்ப்புகள்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண் போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகள் எப்போதுமே தேடி வரும். அதிலும், அழகு சிலையான ஷிவானிக்கு நிச்சயம் பட வாய்ப்புகள் குவியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை தாக்குப்பிடித்த ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் ஷிவானிக்கும் சில அழைப்புகள் வந்துள்ளன.

  இப்போதைக்கு வேண்டாம்

  இப்போதைக்கு வேண்டாம்

  ஆனால், ஷிவானி நாராயணனோ சினிமா வாய்ப்புகளை இப்போதைக்கு வேண்டாம் என தவிர்த்து வருவதாக சமீபத்தில் ரசிகர்களுடன் நடைபெற்ற லைவ்வில் கூறி இருந்தார். விஜய் டிவியில் உருவாகி வரும் புதிய சீரியலில் லீடு ரோலில் ஷிவானி நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  பழையபடி

  பழையபடி

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஷிவானி நாராயணன் வெளியேறிய நிலையில், மீண்டும் பழையபடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் தொடர்ந்து போட்டோக்களாக போட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இப்படியே இருந்திருக்கலாம் நீங்க, தேவையில்லாமல் பிக் பாஸுக்கு போய் ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க என்றும் சில நெட்டிசன்கள் ஷிவானிக்கு ஆறுதலாகவும் அறிவுரையாகவும் சில கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வந்தனர்.

  விட்டமின் டி

  விட்டமின் டி

  இந்நிலையில், தற்போது ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில், பிளேசரை ஓப்பன் பண்ணி விட்டு, கண்களை மூடி வெயிலில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக தினமும் சில விட்டமின் டி டோஸ்களை எடுத்து வருகின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  சிக்ஸ்பேக் ஷிவானி

  சிக்ஸ்பேக் ஷிவானி

  அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். ஷிவானி டைட்டான பனியனை போட்டுக் கொண்டு கொடுத்த அந்த போஸில் கடுமையாக அவர் வொர்க்கவுட் செய்து ஆப்ஸை கச்சிதமாக வைத்திருப்பது தெள்ளத் தெளிவாக தெரியவே நெட்டிசன்கள் என்ன ஷிவானி சிக்ஸ்பேக் எல்லாம் வச்சுட்டீங்க போல என கமெண்ட் செய்துள்ளனர்.

  பாலா இனி அப்படி கூப்பிட மாட்டார்

  பாலா இனி அப்படி கூப்பிட மாட்டார்

  பிக் பாஸ் வீட்டில் ஜோடிகளாக சுற்றித் திரிந்த ஷிவானிக்கும் பாலாவுக்கும் இடையே ஒரு முறை கருத்து மோதல் வெடித்தது. ரோபோ டாஸ்க்கில் ஷிவானிக்கு பாலா குண்டு ரோபோ என பட்டப்பெயர் வைத்து அழைத்தார். இந்த போட்டோவை பாலா பார்த்தால் இனி நிச்சயம் உங்களை அப்படி கூப்பிட மாட்டார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து ஷிவானியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

  English summary
  Shivani Narayanan fans put fire emoji’s and hot comment for her latest instagram post. She captioned it daily dose of Vitamin D also gets appreciation from fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X