Just In
- 12 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 18 min ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 2 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
- 2 hrs ago
'என்ன இவரும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டாப்ல..' வைரலாகும் நடிகை பூனம் பஜ்வாவின் 'ஜில்' போட்டோஸ்!
Don't Miss!
- Sports
இந்தியா இதை மட்டும் செஞ்சா போதும்.. இந்த மேட்ச்சும் போச்சு.. கதிகலங்கிய ஆஸி.!
- News
தேனி ராஜா.. ஆசைப்பட்ட தமிழரசி.. உப்புக்கோட்டைக்கு சிட்டாய் பறந்து வந்து.. அங்க பாருங்க ஒரு டிவிஸ்ட்!
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Lifestyle
Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அறைஞ்சுருவேன்.. அவன் பின்னாடி சுத்தி ஆயா வேலை செய்யவா வந்த.. ஷிவானியை வெளுத்து வாங்கிய அம்மா!
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா அடிக்காத குறையாக அவரை திட்டி தீர்த்தது பார்வையாளர்களை பீதியடையச் செய்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது.
இதனை முன்னிட்டு கடந்த சீசன்களை போல ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

விளையாடிய பாலாஜி
அதன்படி முதல் நபராய் ஷிவானியின் அம்மா அகிலா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். அப்போது ஷிவானி பாத்ரூமில் இருந்தார். அவருக்கு பிக்பாஸ் ஃபிரீஸ் சொல்ல, அவரது மூக்கையில் மையை வைத்து விளையாடினார் பாலாஜி.

கட்டியணைத்து கதறல்
அப்போத சிறுத்தை படத்தில் இடம்பெற்ற ஆராரோ ஆரிராரோ பாடல் ஒலித்தது. பாடலை கேட்டு அழுது கொண்டே நின்றார் ஷிவானி. அதனை தொடர்ந்து அழகாய் என்ட்ரி கொடுத்தார் ஷிவானியின் அம்மா அகிலா. அம்மாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டியணைத்து கதறினார் ஷிவானி.

எதுக்கு வந்த?
எல்லோருக்கும் ஹாய் சொன்ன அகிலா, ஷிவானியிடம் நான் உன்கூட பேசணும் எங்க உட்காந்து பேசலாம் என்று கேட்டார். பின்னர் கார்டன் ஏரியாவில் உள்ள சோஃபாவில் அமர்ந்து தனது மகளுடன் பேசத் தொடங்கிய அவர் எதுக்குடி இங்க வந்த? என்ன பண்ணிட்டு இருக்க? நீ என்ன பண்றனு யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா?

அறைஞ்சுடுவேன்
எல்லாரும் எதுக்கு வந்திருக்காங்க? நீ எதுக்கு வந்திருக்க?
ஒருத்தன் பின்னாடி சுத்தவா வந்திருக்க என்று கேட்டு வெளுத்து விட்டார். என்ன அம்மா இப்படி பேசுறீங்க என்று கதறியப்படியே ஷிவானி கேட்க.. மீண்டும் கொதித்த அவரது அம்மா, வாயை மூடு.. வர கோபத்திற்கு அறைஞ்சுடுவேன் என்றார்.

எதுக்குடி வந்த இங்க?
நானாதான் இருக்கேன்னு சொல்லாத.. அவன் பின்னாடி சுத்துறதுதான் நீயா.. நான் பேசுறதாலதான் எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறீயா? எல்லாருக்கும் இங்க நடக்குறது தெரியுதுடி. அவன் சொல்றதுக்கெல்லாம் வழி மொழியிற.. ஏன் உனக்கு ஒரு பாயிண்டு பேச முடியாதா? பேச தெரியாதா? எதுக்குடி வந்த இங்க?

ஆரி என்ன பேக்கேஜ் வச்சுருக்காரு?
கிறிஸ்துமஸ் கிஃப்ட எதுக்குடி அவனுக்கு கொடுத்த.. இந்த வீட்டுல கேர்ள்ஸே இல்லையா? ஒவ்வொரு முறையும் ஆரி புரோதான் சொல்றாருல்ல.. உன் கேம்ம விளையாடுன்னு.. அவரு என்னடி உன்கிட்ட பேக்கேஜ் வச்சுருக்காரு.. அவரு பேக்கேஜ் வச்சுருக்காருன்னு சொல்லி நாமினேட் பண்ற.. அவரு சொன்னா மாதிரி நீ உனக்கு விளையாட வரல.

என்னத்த கிழிச்சுருக்க?
அவனுக்கு ஆயா வேலை செஞ்சு கப்பு வாங்கிக்கொடுக்க வந்திருக்க.. இந்த பிளாட்ஃபாமுக்கு எதுக்கு நீ வந்த? நீ பண்றதுக்கு அடிக்காம விட்டேனே சந்தோஷப்படு. என்ன பண்ணியிருக்க? 85 நாள் என்னத்த நீ இங்க கிழிச்சுருக்க? ஏதாவது பண்ணியிருந்தா தானே என்ன பண்ணியிருக்கன்னு சொல்ல முடியும். யாருக்குமே சொல்ல தெரியலன்னு சொல்லாத, நீ ஏன் சொல்லல?

அம்மாவ பத்தி கேட்டீயா?
நீ அழுதா உடனே உனக்கு ஓட்டு போட்டு காப்பாத்திடுவாங்களா? நீ பண்றதுக்கெல்லாம் நான் பண்றது கம்மி. ஒரு நாளாவது, அம்மா எப்படி இருப்பாங்கன்னு பிக்பாஸ்க்கிட்ட கேட்டிருப்பியாடீ? உன் மேல அவ்வளவு வெறுப்பு இருந்தும் அம்மா பாட்டு போட்டதும் அழுதேன்.

மூஞ்ச பார்த்தா காண்டாகுது?
இது என்ன ஜோடி நம்பர் ஒன்னுன்னு நினைச்சீயா? நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு வீட்ல அப்பா என்ன நினைப்பாங்க? ஊர்ல நம்ம சொந்தக்காரங்கலாம் என்ன நினைப்பாங்கன்னு தோனுச்சா உனக்கு. நீ பேசு இல்லாட்டி நான் உள்ளே போய் பேசுவேன். உன் மூஞ்ச பார்த்தா இன்னும் காண்டாகுது. ஃபேக்கா அழுது நடிக்காத.. என்று கூறியப்படி உள்ளே எழுந்து சென்றார்.