»   »  நான் பிரியாணி சமைச்சுப் போடறேன், வந்து சாப்பிடுங்க.. அஜீத்துக்கு ஷோபா சந்திரசேகரன் அழைப்பு

நான் பிரியாணி சமைச்சுப் போடறேன், வந்து சாப்பிடுங்க.. அஜீத்துக்கு ஷோபா சந்திரசேகரன் அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கையால் சமைத்த பிரியாணியை அஜீத் சாப்பிட வேண்டும் என விரும்புவதாக, விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 1 ம் தேதி அஜீத்தின் பிறந்தநாள் தினத்தை அன்னதானம், ரத்ததானம், ஸ்பெஷல் ஷோ என்று அவரது ரசிகர்கள் போட்டிபோட்டு கொண்டாடினர்.

Shoba Chandrasekar Wishes Ajith Birthday

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தித் திரையுலகிலிருந்து ஏராளமான நடிக, நடிகையர் அஜீத்திற்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். ஷோபா சந்திரசேகர் வாழ்த்தில் "நீங்கள் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் உங்கள் குடும்பத்தினருடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்.

சண்டைக்காட்சிகள் அடிபட்டு நீங்கள் சிகிச்சை எடுப்பதைப் பார்க்கும்போது ஒரு தாயாக மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுக்கும் நீங்கள் ஒரு நாள் குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்து, எனது கையால் சமைத்த பிரியாணியை சாப்பிட வேண்டும்'' என அஜீத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அம்மாவாக ஷோபா சந்திரசேகர் வைத்த கோரிக்கையை மகனாக அஜீத் நிறைவேற்றுவாரா? பார்க்கலாம்.

English summary
Vijay Mom Shoba Chandrasekar Wishes Ajith for His Birthday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil