பாய்ஃபிரண்ட்டுக்கு பப்ளிக்காக லிப்லாக் முத்தம் கொடுத்த ஸ்ருதி ஹாசன்...பதறிப் போன ரசிகர்கள்

மும்பை : நடிகை ஸ்ருதிஹாசன் தனது பாய் ஃபிரண்ட்டுக்கு பப்ளிக்காக லிப்லாக் முத்தம் கொடுத்த விவகாரமான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. என்ன தான் பாய் ஃபிரண்டாக இருந்தாலும் இப்படியா என ரசிகர்கள் பதறிப் போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், நடிகை, பின்னணி பாடகி, இசைக் கலைஞர் என பல திறமைகளைக் கொண்டவர். இந்தியில் லக் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்த ஸ்ருதிஹாசன், தமிழில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிக்க வந்தார். பிறகு தனுஷுடன் 3, சூர்யாவுடன் சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

வரிசையாக படங்கள்

வரிசையாக படங்கள்

தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருந்து வரும் ஸ்ருதி, வக்கீல் சாப் படத்தை தொடர்ந்து தற்போது சிரஞ்சீவிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார், தமிழில் விஜய் சேதுபதியுடனான லாபம் படத்திற்கு பிறகு சில படங்களில் நடிக்க இவரிடம் பேசப்பட்டு வருகிறது.

பரபரப்பான பர்சனல்

பரபரப்பான பர்சனல்

ஸ்ருதி நடித்த படங்களை விட அவரின் தனிப்பட்ட வாழ்க்கை தான் மீடியாக்களில் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் 2020 ம் ஆண்டு சாந்தனு ஹசாரிக்கா என்ற டூடுல் கலைஞரை காதலித்து வருவதாக அறிவித்தார். இவர்கள் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி செம வைரலானது.

லிவ்விங் டூகெதரில் ஸ்ருதிஹாசன்

லிவ்விங் டூகெதரில் ஸ்ருதிஹாசன்

அதற்கு பிறகு 2020 ம் ஆண்டு கொரோனா லாக்டவுன் சமயத்தில் இருவரும் மும்பையில் உள்ள ஸ்ருதியின் வீட்டில் ஒன்றாக வசிக்க துவங்கினர். காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள், வீடியோக்களையும் ஸ்ருதி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். தற்போது வரை இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டூ கெதர் உறவில் வாழ்ந்து வருகிறார்கள்.

திருமணம் ஆகிடுச்சா, இல்லையா

திருமணம் ஆகிடுச்சா, இல்லையா

சமீபத்தில் பேட்டி ஒன்றில் சாந்தனுவிடம், ஸ்ருதிஹாசன் உடனான உறவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் திட்டம் உள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு சாந்தனு கூறுகையில், ஆக்கபூர்வமாக எங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அதுவே எங்களுடைய உறவு எவ்வளவு பலமானது என காட்டி விட்டது. நாங்கள் ஆக்கப்பூர்வமானவர்கள். இருவரும் இணைந்து ஆக்கப்பூர்வமான விஷயங்களை உருவாக்கி வருகிறோம் . அது தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். திருமணம் நடக்குமா, எப்போது நடக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்தார்.

பப்ளிக்கில் லிப்லாக் முத்தம்

பப்ளிக்கில் லிப்லாக் முத்தம்

இந்நிலையில் தனது காதலர் சாந்தனுவின் பிறந்தநாள் பார்ட்டியில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். அப்போது கேக் வெட்டிய சாந்தனு, ஸ்ருதிக்கு கேக் ஊட்டி விட்டுள்ளார். பிறகு அனைவர் முன்னிலையிலும் இருவரும் லிப்லாக் முத்தம் கொடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி செம வைரலாகி வருகிறது. கமலஹாசனின் மகளா இது என பதறிப் போய் கேட்கும் நெட்டிசன்கள், என்ன தான் பாய் ஃபிரண்டாக இருந்தாலும் பொது இடத்தில் இப்படியா என கேட்டு ஸ்ருதியை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X