»   »  சிசிஎல்: சென்னை ரைனோஸ் அணியை தங்கை அக்ஷராவுடன் சேர்ந்து உற்சாகப்படுத்திய ஸ்ருதி ஹாசன்

சிசிஎல்: சென்னை ரைனோஸ் அணியை தங்கை அக்ஷராவுடன் சேர்ந்து உற்சாகப்படுத்திய ஸ்ருதி ஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த சிசிஎல் போட்டியில் ஆடிய சென்னை ரைனோஸ் அணிக்கு ஆதரவாக ஸ்ருதி ஹாசன் தனது தங்கை அக்ஷராவுடன் வந்திருந்தார்.

திரையுலக நட்சித்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் கடந்த 16ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டம் துவங்கி 6 ஓவர்கள் மட்டுமே ஓடிய நிலையில் கன மழை பெய்தது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

சென்னை அணியை ஊக்குவிக்க ஸ்ருதி ஹாசன் தனது தங்கை அக்ஷராவுடன் வந்திருந்தார். அவர் கூறுகையில், நானும் என் தங்கையும் சேர்ந்து சிசிஎல் போட்டிக்கு வருவது இது தான் முதல் முறை. அந்த போட்டியும் ரத்தானது வருத்தமாக உள்ளது என்றார். அக்காவும், தங்கையும் ஸ்டேடியத்தில் இருந்த பிற நடிகைகளுடன் கலந்துரையாடினர்.

ஸ்ருதி, அக்ஷரா

ஸ்ருதி, அக்ஷரா

நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்க நன்றாக உள்ளது என்றனர் கமல் மகள்கள்.

அக்ஷராவுக்கு தான் ஸ்போர்ட்ஸ் பிடிக்கும்

அக்ஷராவுக்கு தான் ஸ்போர்ட்ஸ் பிடிக்கும்

சென்னை ரைனோஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடரான ஸ்ருதிக்கு கிரிக்கெட் மீது அப்படி ஒன்றும் ஆர்வம் இல்லையாம். ஆனால் அவரது தங்கைக்கு விளையாட்டு என்றால் கொள்ளைப் பிரியமாம்.

வரலட்சுமி சரத்குமார், சோனியா அகர்வாலுடன் கமல் மகள்கள்

வரலட்சுமி சரத்குமார், சோனியா அகர்வாலுடன் கமல் மகள்கள்

ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த வரலட்சுமி சரத்குமார், சோனியா அகர்வாலுடன் ஸ்ருதி, அக்ஷரா. கடந்த 2 ஆண்டுகளாகத் தான் கிரிக்கெட் பார்க்கிறாராம் ஸ்ருதி.

அணியை ஊக்குவிக்கும் ஸ்ருதி, அகஷரா

அணியை ஊக்குவிக்கும் ஸ்ருதி, அகஷரா

ஸ்ருதி ரொம்ப பிசியாக இருப்பதால் சென்னை ரைனோஸ் இனி விளையாடும் போட்டிகளை காண வர முடியுமா என்பது சந்தேகம் தானாம்.

மேட்ச் பார்க்கும் அக்கா, தங்கை

மேட்ச் பார்க்கும் அக்கா, தங்கை

ஸ்ருதியும், அக்ஷராவும் ஆட்டத்தை சீரியசாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

English summary
It was a disappointing day for fans at Lal Bahadur Shastri Stadium, Hyderabad on Saturday (16th February), as the match between Chennai Rhinos and Karnataka Bulldozers was abandoned due to heavy downpour. However, the attraction of the rain-affected match was the rare appearance of Hassan siblings (Shruti and Akshara). The daughters of Universal Star Kamal Hassan were spotted together at the stadium, as they cheered for the Chennai Rhinos.
Please Wait while comments are loading...