பிறந்தநாளுக்கு இப்படியா விஷ் பண்றதா?... ஸ்ருதிஹாசனின் காதலர் என்ன செய்தார் தெரியுமா ?
சென்னை : நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு அவரது காதலர் சாந்தனு ஹசாரிகா வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் ஆத்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதியின் பிறந்த நாளான இன்று ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டு அவரை மகிழ்வித்துள்ளது
மேலும் கோபிசந்த் மாலினேனி இயக்கும் படத்தில் 61 வயது நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

ஸ்ருதிஹாசன்
பிரபல தென்னிந்திய முன்னணி இளம் நடிகையும், நடிகர் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் ஜனவரி 28 ந் தேதி தனது பிறந்த தினத்தை கொண்டாடினார். அவருக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் , நெருங்கிய நண்பர்களும் இணையத்தின் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்
தனது பிறந்த நாளில் ஸ்ருதிஹாசன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் அனைவருக்கும் நன்றிக்கடன் படுகிறேன், மிகவும் நேசிக்கப்படுகிறேன், என் வாழ்வில் மேலும் ஓராண்டு கடந்துவிட்டது.. எனக்கு இன்னும் கற்க, பார்க்க, நேசிக்க பல விஷயங்கள் உள்ளன.என்னைச் சுற்றி யதார்த்தவாதிகள் உள்ளனர். அவர்களிடம் நேரிலும் இணையவழியிலும் எல்லோரிடம் கற்கிறேன். அவர்களின் அன்பு எப்போதும் வழி நடத்தும்.... அனைவருக்கும் நன்றி" என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதியின் காதலர்
நடிகை ஸ்ருதிஹாசன் டெல்லியை சேர்ந்த சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் காதலித்து வருகிறார். அவர், கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர். அவரும் ஸ்ருதியை போன்றே இசை என்றால் ஆர்வம் உள்ளதால் இருவரும் லிவ்விங்டு கேதர் ரிலேஷன்ஷிப்பில் மும்பையில் வாழ்த்து வருகிறார்கள்.

வேடிக்கையான வாழ்த்து
இந்நிலையில், ஸ்ருதி ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க சாந்தனு ஹசாரிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வேடிக்கையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ருதி ஹாசனின் காதலர் சாந்தனு ஹசாரிகா அவரை செல்லமாக Happy Birthday You crazy Women பதிவிட்டுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











