Don't Miss!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- News
பொது கழிப்பறைகளுக்குகு QR Code! சுத்தம் இல்லாமல் உள்ளதா? அப்ப உடனே நீங்க செய்ய வேண்டியது இது தான்!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
- Automobiles
விலை இவ்வளவு கம்மி தானா! ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்!
- Technology
Vijay Sales Mega Republic Day sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
இதெல்லாம் உலக மகா உருட்டுடா சாமி... அந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்
சென்னை:
கமல்ஹாசனின்
மூத்த
வாரிசான
ஸ்ருதிஹாசன்
முன்னணி
ஹீரோக்களுக்கு
ஜோடியாக
நடித்து
வருகிறார்.
ஸ்ருதி
ஹாசன்
நடிப்பில்
தமிழில்
கடைசியாக
விஜய்
சேதுபதியுடன்
நடித்திருந்த
'லாபம்'
திரைப்படம்
வெளியாகியிருந்தது.
அதனபின்னர்
தெலுங்கு
திரையுலகில்
பிஸியாக
இருக்கும்
ஸ்ருதிக்கு
இந்தாண்டு
பொங்கலில்
இரண்டு
திரைப்படங்கள்
வெளியாகியுள்ளன.
பாலகிருஷ்ணாவுடன்
ஜோடியாக
நடித்த
வீர
சிம்ஹா
ரெட்டி,
சிரஞ்சீவியுடன்
நடித்திருந்த
வால்டர்
வீரய்யா
திரைப்படங்கள்
வெளியாகியுள்ளன.
வீங்கிய
உதடு..ஆளே
அடையாளம்
தெரியாமல்
மாறிப்போன
ஸ்ருதிஹாசன்..
என்ன
ஆச்சு?பதறிய
ரசிகர்கள்!

ஸ்ருதியின் டோலிவுட் பொங்கல்
திரையுலகில் நடிகையாகவும் பாடகியாகவும் அறிமுகமான ஸ்ருதி ஹாசன், சூர்யாவுடன் 7ம் அறிவு, தனுஷுடன் 3 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து விஷாலுடன் பூஜை, விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். அதேபோல் தெலுங்கிலும் இளம் ஹீரோக்களுடன் நடித்து மாஸ் காட்டினார். இதனிடையே இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ள ஸ்ருதிஹாசனுக்கு, இந்த ஆண்டு பொங்கல் டபுள் தமாக்காவுடன் தொடங்கியுள்ளது.

திடீரென கிளம்பிய வதந்தி
டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள வால்டர் வீரய்யா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல், வீர சிம்ஹா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி சேர்ந்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. முன்னதாக ஸ்ருதி ஹாசனுக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாத்தால் தான் சீனியர் நடிகர்களுடன் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு நெத்தியில் அடித்தார்போல "நடிப்பு துறையில் வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் உயிரோடு இருக்கும் வரை நடிக்கலாம். இதை ஏற்கனவே பல வயதான ஹீரோக்கள் தங்களை விட இரண்டு மடங்கு வயது குறைவான இளம் நாயகிகளுடன் நடித்து நிரூபித்துள்ளனர்" எனக் கூறியிருந்தார்.

உடல்நிலை குறித்து விளக்கம்
இதனைத் தொடர்ந்து ஸ்ருதி ஹாசன் உடல்நிலை குறித்து மேலும் ஒரு வதந்தி தீயாய் பரவ, தற்போது அதற்கும் விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த ஜூலை மாதம் மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதும் அதனை சரி செய்வதும் எளிதானது அல்ல என தனது இன்ஸ்டகிராமில் ஸ்ருதி ஹாசன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ள வால்டர் வீரய்யா படத்தின் ப்ரோமோஷனில் ஸ்ருதி ஹாசன் கலந்துகொள்ளவில்லை. அவர் மனநல பிரச்சினையில் இருப்பதால் தான் அதில் பங்கேற்கவில்லை என சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து தனது உடல்நலம் குறித்து ஸ்ருதி ஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

அப்படியொன்றும் கிடையாது
தனது டிவிட்டரில் சில ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்துள்ள அவர், தான் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் வால்டர் வீரய்யா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், "நல்ல முயற்சி!! மேலும் நன்றி, நான் வைரஸ் காய்ச்சலில் இருந்து நலமாக மீண்டு வருகிறேன்" என்று குறிப்பிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நான் எப்போதும் ஒரு மனநல வழக்கறிஞராக இருப்பேன், எல்லா அம்சங்களிலும் என்னைக் கவனித்துக்கொள்வதை எப்போதும் ஊக்குவிப்பேன். எனக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தது. உங்களின் முயற்சி மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களை நீங்களே சமாளிக்க முயற்சி செய்யுங்கள், முடியவில்லை என்றால் அதற்கான சிகிச்சை எடுங்கள் எனவும் ஸ்ருதி ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.