»   »  'ரசிகர்கள் விருப்பத்துக்கிணங்க'... சி3 பிப்ரவரி 9ல் ரிலீஸ்!

'ரசிகர்கள் விருப்பத்துக்கிணங்க'... சி3 பிப்ரவரி 9ல் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆம்... தலைப்பில் படித்தீர்களே... அப்படித்தான் விளம்பரம் செய்துள்ளனர் சிங்கம் 3 தயாரிப்பாளர்கள்.

2016-ம் ஆண்டின் மத்தியிலேயே சிங்கம் 3 வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் நான்கைந்து முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப் போனது.

கடைசியாக பிப்ரவரி 3-ம் தேதி வெளியாவதாக அறிவித்தனர். ஆனால் அந்தத் தேதியிலும் வெளியாகவில்லை.

Si3 from Feb 9th

இதுகுறித்து ஸ்டூடியோ க்ரீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடுத்து நிலைமை சரியில்லாததால் சி3 படத்தை வெளியிடவில்லை. காரணம் இந்தச் சமயத்தில் வெளியிட்டால் அது படத்தின் வசூலைப் பாதிக்கும். இந்த நிலைமையில் பல அம்சங்களையும் முன்னிட்டு சி 3 படம் தள்ளிவைக்கப்படுகிறது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்," என்று கூறியது.

இந்நிலையில் இப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளிதழ்களில் ''ரசிகர்கள் விருப்பத்துக்கிணங்க'... சி3 பிப்ரவரி 9ல் ரிலீஸ்!' என்று குறிப்பிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

Read more about: surya சூர்யா
English summary
Studio Green Production says that their big budget movie Si3 will be released on Feb 9rh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil