மார்கழியில் மக்களிசையில் பாடிய சித் ஸ்ரீராம்...என்ன பாட்டுன்னு தெரியுமா ?
சென்னை : நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.
Recommended Video
இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை ஆறாவது நாளாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கோலாகலத் திருவிழாவாக "Hip Hop & Rap" என பெயரிடப்பட்டு நடந்தது.

சித் ஸ்ரீராம் பேச்சு
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் "இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது மிக பெருமையாக இருக்கிறது" நான் வெகுவாக ரசித்தேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார். கவிஞர் தனிக்கொடி "மார்கழியில் மக்களிசை பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றும் நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார்.

ரசிகர்களின் கோரிக்கை
ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேடையில் பாடினார் சித் ஸ்ரீராம். அவர் என்ன பாடல் பாட போகிறார் என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களை கவருவதற்காக அஜித் நடித்துள்ள வலிமை படத்திற்காக அவர் பாடிய அம்மா பாடலை பாடி அசத்த போகிறார் என பலர் எதிர்பார்த்தனர்.

இந்த பாடலா பாடினார்
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படத்தின் இடம்பெற்ற எவர்க்ரீன் டாப் தத்துவ பாடலான உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை பாடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

வாழ்த்திய ஓவியர் அனிதா
இதனை தொடர்ந்து பேசிய ஓவியர் அனிதா ரஞ்சித் "இசைக்கலைஞர்கள் மார்கழியில் மக்களிசை மேடையில் சிறப்பாக பாடினார்கள்" என்று மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார்.

இவரும் கலந்து கொண்டார்
நடிகை ரித்விகா மார்கழியில் மக்களிசையில் கலந்துக்கொண்ட அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளர்களின் கரங்களால் மக்களிசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க ப்பட்டது.


Click it and Unblock the Notifications











