»   »  புருவ அழகியைச் சந்தித்த பிரபல தமிழ் நடிகர்.. தமிழில் நடிக்கவைக்க முயற்சியா?

புருவ அழகியைச் சந்தித்த பிரபல தமிழ் நடிகர்.. தமிழில் நடிக்கவைக்க முயற்சியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரியா வாரியரை சந்தித்த தமிழ் நடிகர்!

திருவனந்தபுரம் : 'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' பாடலில் தனது புருவ நெளிப்பு, கண் சிமிட்டல் மூலம் ரசிகர்களை ஈர்த்த பிரியா வாரியர் சமூக வலைதளங்களில் பயங்கர பிரபலமாகிவிட்டார்.

'ஒரு அடார் லவ்' திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் அவர் அடுத்து மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் அவரை கோலிவுட்டுக்கு அழைத்து வரும் வேலைகளும் நடக்கிறதாம்.

Siddharth meets sensation girl priya

இந்நிலையில, பிரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்து எடுத்த செல்ஃபி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சித்தார்த். தனது புதிய படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக பிரியா வாரியரை சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில், தான் மலையாளத்தில் நடித்துள்ள முதல் படமான 'கம்மார சம்பவம்' படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்காக கேரளா வந்து சென்றார் சித்தார்த். அப்போது யதார்த்தமாக பிரியா வாரியரை சந்தித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சித்தார்த், தமிழ் சினிமா ஸ்ட்ரைக்கில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனக் கூறிவிட்டு மலையாளப் படத்தின் இசை வெளியீட்டில் கலந்துகொண்டது நியாயமா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

English summary
Actor Siddharth meets viral sensation Priya prakash varrier recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X