தூங்கும் முன்பு சில மாத்திரைகளை உட்கொண்ட சித்தார்த் சுக்லா.. நடந்து என்ன? வெளியான பகீர் தகவல்!

மும்பை: நடிகர் சித்தார்த் சுக்லாவின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இரவு தூங்க போகும் முன்பாக சில மாத்திரைகளை உட்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 13 Title Winner திடீர் மரணம் | Sidharth Shukla

இந்தி பிக்பாஸ் 13 வது சீசனின் டைட்டில் வின்னர் நடிகர் சித்தார்த் சுக்லா. கூலான பிஹேவிங்கால் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

40 வயதான சித்தார்த் சுக்லா, சினிமா நடிகர், சின்னத்திரை நடிகர், தொகுப்பாளர், மாடல் என பல முகங்களை கொண்டிருந்தார்.

பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு

பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு

"ஜலக் திக்லா ஜா 6", "ஃபியர் ஃபேக்டர்: காட்ரோன் கே கிலாடி 7" மற்றும் "பிக் பாஸ் 13" உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் சித்தார்த் சுக்லா பங்கேற்றுள்ளார். சில பாலிவுட் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகர் சித்தார்த் சுக்லா.

பிக்பாஸுக்கு பிறகும் நெருக்கம்

பிக்பாஸுக்கு பிறகும் நெருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளரான ஷெனாஸுடன் சித்தார்த் சுக்லா காதல் உறவில் இருப்பதாக தகவல் வெளியானது. இருவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் சரி அதற்கு பின்பும் ரொம்பவே நெருக்கமாக இருந்தனர்.

ஓபனாக காதலை சொன்ன ஷெனாஸ்

ஓபனாக காதலை சொன்ன ஷெனாஸ்

ஷெனாஸ் பல முறை ஓபனாகவே சித்தார்த்து சுக்லா மீதான தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். சித்தார்த் சுக்லா தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்தார். மூத்த சகோதரிக்கு திருமணமான நிலையில் அவர் கணவருடன் வசித்து வந்தார்.

தூக்கத்திலேயே இறந்து போன நடிகர்

தூக்கத்திலேயே இறந்து போன நடிகர்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தூங்கச் சென்ற சித்தார்த் சுக்லா காலையில் எழுந்திரிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அம்மாவும் சகோதரிகளும் கூப்பர் மருத்துவமனையை சேர்ந்த குடும்ப மருத்துவரை அழைத்து பரிசோதித்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் சித்தார்த்த ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தூங்கும் முன்பு சில மருந்துகள்

தூங்கும் முன்பு சில மருந்துகள்

கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு சித்தார்த் சுக்லா மரணமடைந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு உடல் நிலை சரியில்லை என்று கூறிய சித்தார்த் சுக்லா தூங்குவதற்கு முன் சித்தார்த், சில மருந்துகளை உட்கொண்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உடல் பிரேத பரிசோதனை

உடல் பிரேத பரிசோதனை

சித்தார்த் சுக்லாவின் உடல் மும்பை கூப்பர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகு சித்தார்த் சுக்லாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

உடலை பெற காத்திருப்பு

உடலை பெற காத்திருப்பு

சித்தார்த் சுக்லாவின் அம்மாவும் சகோதரியும் வீட்டில் உள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். மற்றொரு சகோதரி தனது கணவருடன் கூப்பர் மருத்துவமனையில் சித்தார்த் சுக்லாவின் உடலை பெறுவதற்காக உள்ளார்.

ஓஷிவாராவில் சித்தார்த் இறுதிச்சடங்கு

ஓஷிவாராவில் சித்தார்த் இறுதிச்சடங்கு

உடல் ஒப்படைக்கப்பட்டவுடன் மும்பை ஓஷிவாரா பகுதியில் சித்தார்த் சுக்லாவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. மேலும் வீட்டிலும் ஷாந்தி பாத் என்ற சடங்கு செய்யப்படவுள்ளது. இதனை தொடர்ந்து இறுதிச்சடங்குகளுக்கு பின் அவரது உடல் தகனம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை

அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை

ஃபிட்னஸில் அதிக ஆர்வம் கொண்ட சித்தார்த் சுக்லாவின் மறைவு ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ரூமர்டு காதலியான ஷெனாஸ் சித்தார்த் சுக்லா மறைந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இரங்கல்

சமூக வலைதளங்களில் இரங்கல்

பிக்பாஸ் 13வது சீசனில் பங்கேற்ற சித்தார்த் சுக்லாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவரது திடீர் மரணம் ரசிகர்களையும் பாலிவுட் பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X