Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரிலீசாகும் மகா படம்... ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு
சென்னை : நடிகர் சிம்புவின் மாநாடு படத்திற்கு பிறகு அவர் வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மகா படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.
அனுமதியின்றி கார் பந்தயம் நடத்தியதாக பிரபல நடிகர் மீது வழக்கு...ரசிகர்கள் கோவம்

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது மாநாடு படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் திரைக்கதை அனைவருக்கும் புரியும்வகையில் சிறப்பாக அமைந்திருந்தது.

சிறப்பான வெற்றி
இதையடுத்து ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினர். சிறப்பான வெற்றியை பெற்ற இந்தப் படம் வசூல் சாதனையையும் செய்தது. சிறப்பான விமர்சனங்களையும் பெற்றது. தொடர்ந்து தற்போது சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தள்ளிப்போன மகா ரிலீஸ்
முன்னதாக இவர் மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து நடித்துள்ள மகா படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போனது. படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் மனக்கசப்பு என்று கூறப்பட்டது. அவருக்கு சம்பள பாக்கி என்றும் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய இந்தப் படத்தை மற்ற இயக்குநர்களை வைத்து படமாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஜூன் 10ல் ரிலீஸ்
இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 10ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யூ.ஆர் ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் முன்னதாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேக் அப் ஆன காதல்
சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. பின்னர் அவர்களுக்குள் பிரேக் அப் ஆனதாகவும் கூறப்பட்டது. இந்த பிரேக் -அப்பை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து மகா படத்தில் நடித்துள்ளனர். அதனால் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கெஸ்ட் ரோலில் சிம்பு
இந்தப் படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமாக இருப்பதாகவும் சிம்பு கெஸ்ட் ரோலில்தான் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆயினும் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவற்றில் இருவரும் அதிகமான ரொமான்ஸ் செய்துள்ளனர். இதுவும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்
இந்நிலையில் படம் ஜூன் 10ம் தேதி ரிலீசாக உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் அடுத்ததாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மகா படம் வெளியாகவுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறார்.