»   »  மீண்டும் இணையும் சிம்பு - ஜி.வி.பிரகாஷ்... த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா இயக்குநருக்காக!

மீண்டும் இணையும் சிம்பு - ஜி.வி.பிரகாஷ்... த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா இயக்குநருக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தின் மூலம் 8 வருடங்களுக்குப் பின் மீண்டும் சிம்பு படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

அறிமுகப் படமான த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மூலம் சிம்பு படத்தை இயக்கும் வாய்ப்பு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்திருக்கிறது.

Simbu Join Hands with G.V.Prakash

சிம்புவின் திரை வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் அவருக்கு 3 கெட்டப் என்றும், அதனால் படத்தில் 3 முன்னணி நாயகிகளை நடிக்க வைக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

இடையில் இந்தப் படத்தில் இருந்து சிம்பு விலக அவருக்குப் பதில், அறிமுக ஹீரோ ஜி.வி.பிரகாஷை ஆதிக் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் "இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை மட்டும்தான் அமைக்கிறார், மற்றபடி ஹீரோ சிம்புதான்.எனது அடுத்த படத்தில் தான் நான் ஜி.வி.பிரகாஷை இயக்கப் போகிறேன்" என்று ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

தற்போது இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் 8 வருடங்களுக்குப் பின் மீண்டும் சிம்பு-ஜி.வி.கூட்டணி இணைகிறது.

கடந்த 2008ம் ஆண்டு சிம்பு, வேதிகா, சங்கீதா நடிப்பில் வெளியான 'காளை' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
After Kaalai Simbu Once Again Join Hands with Music Composer G.V.Prakash, for His Upcoming Project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil