»   »  30 கோடி பட்ஜெட், 3 கெட்டப், தல பிறந்தநாள்... சிம்புவின் மெகா திட்டம்!

30 கோடி பட்ஜெட், 3 கெட்டப், தல பிறந்தநாள்... சிம்புவின் மெகா திட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பின் சிம்பு நடிக்கும் புதிய படத்தில், அவர் 3 விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்க, சிம்பு நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் 3 முன்னணி நாயகிகளை சிம்புவிற்கு ஜோடியாக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.

அச்சம் என்பது மடைமையடா

அச்சம் என்பது மடைமையடா

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கிறார். அச்சம் என்பது மடமையடா என்று முதல் படத்தைப் போலவே இந்தப் படத்திற்கும் நீளமாகவே பெயர் சூட்டியிருக்கின்றனர்.சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன்

அச்சம் என்பது மடைமையடா படத்தைத் தொடர்ந்து த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்று முன்னதாக செய்திகள் அடிபட்டன. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன்-சிம்பு இணைவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

3 கெட்டப் 3 நாயகி

3 கெட்டப் 3 நாயகி

இதுவரை அதிகம் கெட்டப் மாற்றி நடிக்காத சிம்பு இப்படத்தில் முதன்முறையாக 3 விதமான கெட்டப்களில் நடிக்கவிருக்கிறாராம். மேலும் சிம்புவிற்கு ஜோடியாக 3 முன்னணி நாயகிகளை ஒப்பந்தம் செய்திட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம்.

அதிக பட்ஜெட்

அதிக பட்ஜெட்

இந்தப் படத்தை சுமார் 30 கோடிகளுக்கும் அதிகமான பொருட்செலவில் ரேபெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதுவரை குறைந்த பட்ஜெட் படங்களிலேயே நடித்து வந்த சிம்பு முதன்முறையாக 30 கோடி பட்ஜெட்டில் நடிக்கவிருக்கிறார்.

அஜீத் பிறந்தநாள்

அஜீத் பிறந்தநாள்

சிம்பு தீவிரமான அஜீத் ரசிகர் என்பதால் அவரது பிறந்தநாளான மே 1ம் தேதி இந்தப் படத்தின் பூஜையை தொடங்க சிம்பு முடிவு செய்திருக்கிறாராம். விரைவில் படம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

பீப் பாடல் சர்ச்சையில் சிக்கிய சிம்பு தற்போது அதிலிருந்து மெதுவாக மீண்டு கொண்டிருக்கிறார். இந்த வருடத் தொடக்கத்தில் அச்சம் என்பது மடமையடா டீசர், தள்ளிப் போகாதே பாடல் ஆகியவை வெளியாகி சிம்பு ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் சிம்பு நடிப்பது அவரது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

English summary
After Acham Enbathu Madamaiyada Simbu Next Team Up with Trisha illana Nayanthara Fame Adhik Ravichandran.The Normal Shoot Begins on May 1.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil