For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வெந்து தணிந்தது காடு படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சிம்பு: இனி தான் தரமான சம்பவங்கள் காத்திருக்கு!

  |

  சென்னை: 'மாநாடு' கொடுத்த அதிரிபுதிரி வெற்றி, சிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்கு பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இயக்குநர் கெளதம் வாசுதேவ், இசைப்புயலுடன் 3வது முறையாக கூட்டணி வைத்துள்ள சிம்பு, 'வெந்து தணிந்தது காடு' படத்தையும் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில், தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இருந்து சூப்பர் அப்டே கொடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்துள்ளார் சிம்பு.

  12 ஆண்டுகளுக்கு பின் இணைந்த காம்போ...வெந்து தணிந்தது காடு படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் முவீஸ் 12 ஆண்டுகளுக்கு பின் இணைந்த காம்போ...வெந்து தணிந்தது காடு படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் முவீஸ்

  ஐ எம் ஏ சூப்பர் ஸ்டார்

  ஐ எம் ஏ சூப்பர் ஸ்டார்

  லிட்டில் சூப்பர் ஸ்டார், சிலம்பரசன், சிம்பு, STR இப்போது ஆத்மன் என, பல பெயர்களில் தமிழ் சினிமாவின் லீடிங் ஸ்டாராக அசத்தி வருகிறார் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய சிம்புவின் திரைப்பயணம், இன்று அசுர வேகத்தில் போய்கொண்டு இருக்கிறது. வெற்றி தோல்வி என சினிமாவில் அனைத்தையும் பார்த்துவிட்ட சிம்பு, நடிகனாக மட்டுமல்லாமல் சிங்கர், டைரக்டர், ரைட்டர் என வெரைட்டியாக கலக்கி வருகிறார்.

  விண்ணைத்தாண்டிய வெற்றி

  விண்ணைத்தாண்டிய வெற்றி

  நடித்தால் ஒரேடியாக படங்களில் நடித்துக் கொண்டே இருப்பதும், இல்லையென்றால் திடீரென சில நாட்கள் காணாமல் போவதும் சிம்புவின் வழக்கம். இது போதாதென்று அவர் சூட்டிங்க்கு சரியாக வருவதில்லை என்ற விமர்சனங்களும், அடிக்கடி எழுதுவதுண்டு. இதனாலேயே சிம்புவை வைத்து படம் எடுக்க பலரும் தயங்கினர். அப்போது தான் யாரும் எதிர்பாராத ஒரு மாயாஜாலம் நிகழ்ந்தது. கெளதம், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருடன், சிம்புவும் திரிஷாவும் காதல் கூட்டணி வைத்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' மெகா ஹிட் அடித்தது.

  விட்டத புடிக்கணும்

  விட்டத புடிக்கணும்

  சிம்புவின் வாழ்வில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மேஜிக் செய்த போதிலும், மீண்டும் அவரது படங்கள் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு டைம் லூப்பில் சிக்கிக் கொண்டு பாடாய்ப்படும் 'மாநாடு' திரைப்படம், ரிலீஸ் ஆகாமல் டைம் லூப்பில் மாட்டிக் கொண்டு தத்தளித்தது. ஆனால், தடைகளை தகர்த்தெறிந்து திரையரங்குகளில் வெளியான 'மாநாடு' பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை சொல்லி அடித்தது.

  வெந்து தணிந்தது காடு

  வெந்து தணிந்தது காடு

  ஒருவழியாக தமிழ் சினிமாவில் தனக்கிருந்த இடத்தை 'மாநாடு' படத்தின் மூலம் மீண்டும் பிடித்த சிம்பு, மீண்டும் கெளதம் மேனனுடன் இணைந்தார். 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடைமையடா' என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சிம்பு, கெளதம், ஏ.ஆர். ரஹ்மான் காம்போ, 'வெந்து தணிந்தது காடு' படத்தில் திரும்பவும் இணைந்தது. எழுத்தாளர் ஜெயமோகனின் 'அக்னி குஞ்சொன்று கண்டேன்' என்ற கதையை பின்னணியாக வைத்து எடுப்பதாகக் கூறப்படுகிறது.

  அசத்தல் அப்டேட்

  அசத்தல் அப்டேட்

  சிம்புவுடன் சிந்தி இத்னானி, ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம், சூட்டிங் முடிந்து செப்டம்பர் 15ம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர், ரஹ்மான் இசையில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகி வைரலாகிவிட்டன. இது கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அப்பா டி.ராஜேந்திரனின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிந்த சிம்பு, சென்னை திரும்பியதும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டப்பிங் பணியை நிறைவுசெய்துவிட்டார். இதனை சிம்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவிக்க, அவரது ரசிகர்கள் ஆனந்த கூத்தாடி வருகின்றனர்.

  English summary
  Simbu completed his dubbing for Vendhu Thanithadhu Kaadu movie
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X