Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு… விஜய்க்காக செய்த சம்பவம்: ட்ரெண்டாகும் போட்டோ
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாடல் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' வெளியாகி ஹிட் ஆன நிலையில், இரண்டாவது பாடலை சிம்பு பாடியுள்ளார்.
வாரிசு படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
DSP
படத்தின்
'நல்லா
இரும்மா'
பாடலின்
அமோக
வெற்றி,
மகிழ்ச்சியில்
பாடலாசிரியர்
விஜய்
முத்துப்பாண்டி!

வாரிசு ஷூட்டிங் அப்டேட்
விஜய் நடித்து வரும் வாரிசு இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம், பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த கட்டுப்பாடுகள் எல்லாம் தவிடு பொடியானதால், விஜய் ரசிகர்கள் மாஸ் காட்ட ரெடியாகிவிட்டனர். இந்நிலையில், வாரிசு படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 2ம் தேதி முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. கடைசியாக சில பேட்ச் ஒர்க் காட்சிகளை மட்டும் எடுக்க வேண்டியுள்ளதாம்.

செகண்ட் ரிலீஸ் தேதி
இதனிடையே வாரிசு செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியையும் படக்குழு முடிவு செய்துள்ளதாம். முதல் பாடலான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. விஜய் அந்தப் பாடலை பாடியிருந்த நிலையில், இரண்டாவது பாடலை சிம்பு பாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், வாரிசு செகண்ட் சிங்கிள் டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு
வாரிசு செகண்ட் சிங்கிளை சிம்பு பாடியுள்ளார் என்ற தகவல் வெளியானதில் இருந்தே, விஜய் - சிம்பு தரப்பு ரசிகர்கள் இணைந்து இதனை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கும் சிம்பு நேரில் சென்றுள்ளது ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. ப்ளாக் டீஷர்ட்டில் செம்ம ஸ்மார்ட்டாக இருக்கும் சிம்பு, இயக்குநர் வம்ஷி பைடிபள்ளியுடன் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போட்டோ வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இதனால், வாரிசு படத்தில் சிம்புவும் கேமியோ ரோலில் நடித்திருப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

விஜய்யுடன் இணைந்த உதயநிதி
வாரிசு படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை லலித் குமார் வாங்கியுள்ளார். அதேபோல், அஜித்தின் துணிவு தமிழ்நாடு தியேட்டர் ரைட்ஸை உதயநிதி கைப்பற்றியுள்ளார். இரண்டு படங்களுக்கும் ஒரே எண்ணிக்கையில் தான் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஏரியாக்களில் மட்டும் விஜய்யின் வாரிசு தியேட்டர் உரிமையை உதயநிதி வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், வாரிசு படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சினை இருக்காது எனத் தெரிகிறது.
-
ஆளுக்கு ஒரு ரெண்டு நாள்.. நட்பு ரீதியாக வந்து போறாங்களாம்.. உச்ச நடிகர் படத்தை எதிர்பார்க்கலாமா?
-
முழு பைத்தியமாவே மாறிட்டாங்க போல.. மேலயும் ஜீன்ஸ் பேன்ட்டை மாட்டிட்டு உலா வந்த பிக் பாஸ் நடிகை!
-
தளபதி 67 பட ஷூட்டிங்கிற்கு தனி ஹெலிகாப்டரில் சென்றாரா கமல்? டிரெண்டாகும் புகைப்படம்.. உண்மை என்ன?