பான் இந்தியன் படமாம்...கமல் சார், அந்த படத்தை ரிலீஸ் பண்ணுங்க...சிம்பு எதை சொல்றாரு?
சென்னை : எல்லோரும் பான் இந்தியன் படம்ன்னு பேசிட்டு இருங்காங்க. கமல் சார், அந்த படத்தை ரிலீஸ் பண்ணிவிடுங்க. அப்போ தெரியும் எல்லோருக்கும் என விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பேசினார்.
சமீப காலமாக பான் இந்தியா படம் என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் புஷ்பா, கேஜிஎஃப் 2 போன்ற பிற மொழி படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இந்த பேச்சு இன்னும் அதிகமாகி விட்டது. பான் இந்தியன் படம் என குறிப்பிடுவதற்கு சில நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் இது தொடர்ந்து வருகிறது.

பான் இந்தியா படம் பற்றி சிம்பு
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விக்ரம் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்புவும் பான் இந்தியன் படம் பற்றிய குறிப்பிட்டார். சிம்புவின் இந்த பேச்சிற்கு விசில் மற்றும் கைதட்டல்கள் பறந்தது. ஸ்டேடியத்திற்குள் சிம்பு வந்ததுமே ரசிகர்கள் கத்தி கூச்சலிட துவங்கி விட்டனர். சிம்பு பேச வேண்டும் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.

கமல் எனக்கு ஆன் ஸ்கிரீன் குரு
சிம்பு மேடையில் பேசிய போது, கமல் 50 விழா இங்கு தான் நடைபெற்றது. அதில் நானும் கலந்து கொண்டேன். அந்த விழாவில் பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது தான் அந்த சான்ஸ் கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. கமல் சார் எனக்கு ஆன் ஸ்கிரீன் குரு.

அந்த படத்தை ரிலீஸ் பண்ணுங்க
சார், இப்போ எல்லோரும் பான் இந்தியா படம் பற்றியே பேசிகிட்டு இருக்காங்க. அந்த மருதநாயகம் படத்தை கொஞ்சம் ரிலீஸ் பண்ணிவிடுங்க சார். அப்போ தான் எது பான் இந்தியா படம்ன்னு தெரியும். சார் கூட நான் அப்போ அப்போ படம் பார்ப்பேன். சில படங்கள் பிடிக்கலைன்னு சொல்லுவேன். ஆனால் அது ஹிட் ஆகி விடும். சில படங்கள் நல்லா இருக்குன்னு சொல்லுவேன் அது ஓடாது. ஆனால் விக்ரம் டிரைலரே செமயா இருக்கு. படம் நிச்சயம் ஹிட் ஆகும்.
Recommended Video

முதல் ஆளாக நான் தான் போனேன்
இப்போ தான் 5 மணிக்கு நான் எழுந்திருக்கிறேன். ஆனால் அப்போ எல்லாம் நான் தூங்குறதுக்கே காலைல 5 மணி ஆகும். யாரு சொன்னாலும் எழுந்திருக்க மாட்டேன். ஆனால் விஸ்வரூபம் பிரச்சனை வந்தப்போ முதல் ஆளா எழுந்து நான் தான் கமல் சார் வீட்டுக்கு போனேன் என்றார் சிம்பு. அதோடு சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து விக்ரம் படத்தில் வரும் பத்தல பத்தல பாடலுக்கு சிம்பு நடனமாடினார்.


Click it and Unblock the Notifications