Don't Miss!
- News
செல்ஃபி புள்ளை! மலை பூங்காவின் "கேமராவை" தூக்கிய கரடி.. ஒன்னு ரெண்டு இல்ல 400 போட்டோ எடுத்து அசத்தல்
- Finance
மாதம் 8000 சம்பளம் வாங்கியவர், தினமும் 6 கோடி சம்பாதிக்கிறார்.. யார் இந்த நிதின்..!
- Sports
கே.எல்.ராகுலை தொடர்ந்து அக்ஷர் பட்டேல்.. சைலண்ட்டாக நடந்து வரும் திருமணம்.. யார்? யார்? பங்கேற்பு
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஒரு பொண்ண தொடனும்னா...மஹா டீசரில் சிம்பு சொன்ன அசத்தல் அட்வைஸ்
சென்னை : நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஹன்சிகாவின் 50 வது படமான மஹா படத்தை வெளியிட சமீபத்தில் கோர்ட் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து மஹா படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன.
கொரோனா
விதிகளை
மீறியதாக
வழக்கு...
மம்முட்டியை
சிக்க
வைத்த
வைரல்
ஃபோட்டோ
காதல் முறிவிற்கு பிறகு சிம்புவும், ஹன்சிகாவும் மீண்டும் இணைந்துள்ள படம் என்பதால் மஹா படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவும் ரத்தத்தால் நிறப்பப்பட்ட பாத் டப்பில் ஆடையின்றி, கையில் துப்பாக்கியுடன் இருக்கும் ஹன்சிகாவின் போஸ்டர், படத்தின் கதை என்னவாக இருக்கும் என அனைவரின் ஆர்வத்தையும் தூண்டி உள்ளது.

ஹன்சிகா பிறந்தநாளில் புதிய டீசர்
இந்நிலையில் ஹன்சிகா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனைக் கொண்டாடும் விதமாக மஹா படக்குழுவும், படத்தின் புதிய டீசரை வெளியிட்டனர். இதில் அட்டகாசமான இசையுடன் ஹன்சிகா, சிம்பு உடனான ரொமான்ஸ், ஆக்ஷன் என பலவிதமாக காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

மீண்டும் சிம்பு-ஹன்சிகா ரொமான்ஸ்
முன்னாள் காதலர்களான சிம்பு - ஹன்சிகாவின் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. படத்தின் மெயின் டீசர் பல மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது. இது நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்போது ஹன்சிகா பிறந்தநாளுக்காகவே இந்த டீசரை பிரத்யேகமாக தயாரித்து, வெளியிட்டுள்ளனர்.

சிம்பு சொன்ன அட்வைஸ்
இந்த டீசரில் ரசிகர்களை கவர்ந்த மற்றொரு விஷயம் சிம்பு கூறும் அட்வைஸ் தான். டீசரில் சிம்பு, ஒரு பொண்ண தொடனும்னா முதல அவளோட மனச தொடனும் என டயலாக் பேசி உள்ளார். தொடர்ந்து வில்லன்களுடன் அதிரடி சண்டை காட்சிகளில் இறங்குகிறார். ரொமான்ஸ், ஆக்ஷன் கலந்த இந்த டீசர் லைக்குகளை குவித்து வருகிறது.

சிறப்பு தோற்றத்தில் சிம்பு
யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ள இந்த படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நாயகியை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ஹன்சிகா லீட் ரோலில் நடத்துள்ளார். அவருடன் ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் தான் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

ரிலீஸ் எப்போது
ஏற்கனவே படத்தின் வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டது. அதனால் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற அறிவிப்பிற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதா அல்லது ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதா என தெரியவில்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
Recommended Video

ஓடிடி ரிலீசா
சில முன்னணி ஓடிடி தளங்களுடனும் பேசப்பட்டு வருகிறதாம். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலை உள்ளதால் மஹா படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
ஆளவந்தான் ரீ-ரிலீஸ்: 400 கோடி செலவில்..? 1000 தியேட்டர்களில்! எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்டேட்
-
அப்படி டிரெஸ் அணிவதால் யாரும் எனக்கு வீடு வாடகைக்கு தரமாட்றாங்க.. பிக் பாஸ் நடிகை புலம்பல்!
-
ராஷ்மிகா மந்தனா, ராதிகா உடன் வாரிசு சக்சஸ் பார்ட்டி.. வெறித்தனம் காட்டும் தளபதி 67 லுக்கில் விஜய்!