சிம்புவின் மாநாடு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறு விறு வேகத்தில் தொடங்கியது.. புதிய அப்டேட் !

சென்னை : பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.

இதில் எஸ் ஜே சூரியா வில்லனாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறு விறு வேகத்தில் தொடங்கியுள்ளது.

வெங்கட்பிரபு

வெங்கட்பிரபு

ஈஸ்வரன் வெற்றிக்குப் பிறகு சிம்புவின் படங்களை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட மாநாடு படப்பிடிப்பு தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

த்ரில்லர்

த்ரில்லர்

அரசியல் பின்னணியில் த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக இதில் வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் இதற்கு முன்பு சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமாக

வித்தியாசமாக

வெங்கட்பிரபுவின் முந்தைய படங்களை விடவும் வித்தியாசமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமாக எதிர்பார்ப்பு இருக்க டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையதளத்தை கலக்கியது. வழக்கம்போல இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Recommended Video

MAANAADU - இதுவரைக்கும் பார்க்காத SIMBU | DIRECTOR VENKATPRABHU EXCLUSIVE | FILMIBEAT TAMIL
விறுவிறு வேகத்தில்

விறுவிறு வேகத்தில்

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மாநாடு படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படம் மிகவும் அட்டகாசமாக வந்துள்ளது என தெரிவித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறு வேகத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டுள்ளது. வேகமாக முடித்துவிட்டு இப்படத்தை தீபாவளிக்கு படத்தை வெளியிடும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X