Don't Miss!
- News
நான் கிரிக்கெட் வீரர்! பவுலர்களை பார்த்து பயந்தால் வேலைக்கு ஆகுமா! அமமுக வேட்பாளர் சிவபிரசாத் பளிச்!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சிம்புவின் வெந்து தணிந்தது காடு... அட்டகாசமான ஹாட் அப்டேட்
சென்னை : புதிய அவதாரம் எடுத்தது போல் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் பரம்பரமாக சுழன்று நடித்து வருகிறார் சிம்பு. மாநாடு படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு, சிம்பு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக செம கொண்டாட்டமாக உள்ளது.
குடிபழக்கத்தை விட்டு தான் முற்றிலும் மாறி விட்டதாக கூறிய சிம்பு, அதை செயலிலும் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். சொன்ன தேதியில் மாநாடு படத்தை முடித்து கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். செயலில் மட்டுமல்ல, தோற்றத்திலும் மாற்றம் காட்டி அசத்தி வருகிறார்.

மாநாடு படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிம்பு. இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்த ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அனைவரையும் மிரள வைத்துள்ளார் சிம்பு.
இதைத் தொடர்ந்து ராதிகாவும் சிம்புவும் பேசிக் கொண்டிருப்பது போன்ற சிம்புவின் ஃபோட்டோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்த படத்தில் சிம்புவின் அம்மா கேரக்டரில் ராதிகா நடிப்பதாக கூறப்படுகிறது. திருச்செந்தூரில் படத்தில் வேலைகள் துவங்கப்பட்டு, முதல்கட்ட ஷுட்டிங் நடைபெற்றது.
லேட்டஸ்ட் தகவலின் படி, வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங் நாளை துவங்க உள்ளதாம். இந்த மாத இறுதிக்குள் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விடும் என கூறப்படுகிறது. விரைவில் படத்தை முடித்து ரிலீஸ் செய்யவே படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிம்பு அடுத்தடுத்து நடிக்கும் படங்களான பத்து தல, கொரோனா குமாரு ஆகிய படங்களின் ஷுட்டிங் செப்டம்பரில் துவங்கப்பட உள்ளது. அதற்கு முன் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து முடித்து விடுவார் என கூறப்படுகிறது. சிம்புவின் அடுத்தடுத்த படங்களால் அவரை மாறுபட்ட வேடங்களில் பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வெந்து தணிந்தது காடு படத்திற்காக ஸ்லிம்மாகி, க்ளீன் ஷேவ் பண்ணி இருந்த சிம்பு, கடந்த வாரம் நீண்ட தாடியுடன் வேஷ்டி சட்டையில் இருக்கும் மாஸான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் இது எந்த படத்திற்கான கெட்அப் என கேட்க துவங்கி விட்டனர். படத்திற்கு படம் தோற்றம், ரோல், நடிப்பு என அனைத்திலும் வித்தியாசம் காட்ட தயாராகி விட்டார் போல சிம்பு என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
Recommended Video
சமீபத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள அரசியல் த்ரில்லர் படமான மாநாடு படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் அக்டோபர் மாதத்தில் பண்டிகை நாளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் எனவும் படக்குழு நம்புகிறது.
என்னது சமந்தா கர்ப்பமா... புதிய அறிவிப்பால் கிளப்பிய புதிய வதந்தி