twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் சமரசம்: நாளை ரிலீஸாவது கன்ஃபார்ம்

    |

    சென்னை: சிம்பு நடித்து நாளை வெளியாகவுள்ள வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடைசெய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதால் படம் வெளியாவதற்கு எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதனால் திட்டமிட்டபடி சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நாளை உறுதியாக வெளியாகிறது.

    சிம்புவுடன் மோதும் தனுஷ்.. ட்ரீட்டுக்கு தயாராகும் ரசிகர்கள்! சிம்புவுடன் மோதும் தனுஷ்.. ட்ரீட்டுக்கு தயாராகும் ரசிகர்கள்!

    ரிலீஸுக்கு தடைகோரி வழக்கு

    ரிலீஸுக்கு தடைகோரி வழக்கு

    மாநாடு படத்தைத் தொடர்ந்து சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் செம்ம ஹிட்டடித்துள்ளன. இந்தப் படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்துக்கு தடை விதிக்க கோரி, ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    சூப்பர் ஸ்டார் டைட்டிலில் ஒரு படம்

    சூப்பர் ஸ்டார் டைட்டிலில் ஒரு படம்

    அந்த மனுவில் கடந்த 2018ம் ஆண்டு சிம்பு நடிப்பில் 'சூப்பர் ஸ்டார்' என்ற டைட்டிலில் ஒரு படத்தை தயாரிக்க, இயக்குநர் கவுதம் மேனனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன் பணமாக 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களிடம் கூறிய அதேகதையை வெந்து தணிந்தது காடு என்ற பெயரில் படமாக எடுத்து, நாளை வெளியிட இருப்பதாகவும், தங்களுக்கு தரவேண்டிய இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை தராமல் படத்தை வெளியிடக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இரு தரப்பினரிடையே சமரசம்

    இரு தரப்பினரிடையே சமரசம்

    இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 2018ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்டுள்ள வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஒப்பந்தம் செய்தது உண்மைதான் என்றும், அடுத்தப் படத்தை இயக்கும் முன் மனுதாரருக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்பி வழங்கி விடுவதாகவும், இது தொடர்பாக மனுதாரருடன் சமரசம் செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    வெந்து தணிந்தது காடு ரிலீஸ் கன்ஃபார்ம்

    வெந்து தணிந்தது காடு ரிலீஸ் கன்ஃபார்ம்

    சமரசம் செய்துகொள்ள மனுதாரர் தரப்பில் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, பணத்தை திருப்பிக் கொடுப்பது தொடர்பான உத்தரவாதத்தை, பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி கவுதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 21ம் தேதிக்கு தள்ளி வைப்பதாகக் கூறினார். இதனையடுத்து சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது. மேலும், திட்டமிட்டபடி நாளை ரிலீஸாவதும் கன்ஃபார்ம் ஆனது. இதனால், சிம்புவின் ரசிகர்கள் முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் உற்சாகத்தில் உள்ளனர்.

    English summary
    There is no ban on the release of Simbu starrer Vendhu Thanindhathu Kaadu. which is slated to release tomorrow, as both parties have settled the case seeking a ban on the release of the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X